SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய பெராரி ரோமா

2019-12-22@ 00:23:33

ஸ்போர்ட்ஸ் ரக கார் தயாரிப்பில் உலக புகழ்பெற்ற பெராரி நிறுவனம், கிராண்ட் டூரர் ரகத்தில் புதிய ரோமா காரை உருவாக்கி இருக்கிறது. பெராரி நிறுவனத்தின் பிரபலமான 250 ஜிடி பெர்லினேட்டா லஸ்ஸோ மற்றும் 250 ஜிடி 2+2 ஆகிய  கார்களின் கட்டமைப்பு யுக்திகளை மனதில் வைத்து இந்த காரை உருவாக்கி இருக்கிறது. இத்தாலி தலைநகர் ரோம் நகரை குறிக்கும் வகையில் ரோமா என்று இப்புதிய காருக்கு பெயரிட்டுள்ளது பெராரி. வழக்கம்போல் பெராரி கார்களுக்கு உரிய  தனித்துவமான டிசைன் அம்சங்களை தாங்கி வந்துள்ளது இப்புதிய ரோமா ஸ்போர்ட்ஸ் கார். இந்த காரில் 3.9 லிட்டர் வி8 டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

 இந்த இன்ஜின் அதிகபட்சமாக 611 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 8 ஸ்பீடு F-1 டியூவல் கிளட்ச்  கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இப்புதிய ஸ்போர்ட்ஸ் கார் 0 - 100 கி.மீ வேகத்தை 3.4 வினாடிகளிலும், 0 - 200 கி.மீ வேகத்தை 9.3 வினாடிகளிலும் எட்டிவிடும் திறன் வாய்ந்தது. மணிக்கு 320 கிமீ வேகத்தை தொடும் வல்லமை கொண்டது. இந்த கார், 4,656 மி.மீ. நீளம், 1,974 மி.மீ. அகலம், 1,301 மி.மீ. உயரம் கொண்டுள்ளது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,670 மி.மீ. ஆக உள்ளது. 80 லிட்டர் கொள்திறன் கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. இந்த காரில் 272 லிட்டர் கொள்திறன்  கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. இதனை 345 லிட்டர் கொள்திறன் கொண்டதாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்த காரில் புதிய சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

எதிர்காலத்தில் இதே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் சேஸீதான்  பெராரி கார்களில் பயன்படுத்தப்பட இருக்கிறது. இலகு எடை, அதிக உறுதித்தன்மை மற்றும் சிறப்பான கையாளுமையை இந்த சேஸீ வழங்கும்.இப்புதிய காரில், முழுமையான மேட்ரிக்ஸ் எல்இடி அடாப்டிவ் ஹெட்லைட் உள்ளது. சிறப்பான காற்று குளிர்விப்பு முறையை வழங்கும் வடிவமைப்புடன் கிரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டியூவல் காக்பிட் கான்செப்ட்  வழங்கப்பட்டு இருக்கிறது. ஓட்டுனருக்கும், சக பயணிக்கும் தனித்தனியான அமைப்பை இந்த கார் பெற்றிருக்கிறது. இந்த காரில், புதிய ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 16 அங்குல திரையுடன்கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்  கிளஸ்டர் இடம்பெற்றுள்ளது. 8.4 அங்குல செங்குத்து, திரை அமைப்புடன் இன்போடெயின்மென்ட் உள்ளது.

இந்த காரில் அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்பட ஓட்டுனருக்கான ஏராளமான கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் உள்ளன. சக பயணிக்கும் டேஷ்போர்டில் தொடுதிரை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் 2 முன் இருக்கைகளும்,  பின்புறத்தில் 2 சிறிய இருக்கைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கூபே கார் தனித்துவமான பெராரி காராக இருக்கிறது. அடுத்த ஆண்டு, முதல் காலாண்டில் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த கார், அஸ்டன்  மார்ட்டின் வான்டேஜ், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி கார்களுடன் போட்டி போடும். விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

 • 03-06-2020

  03-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • schoolopen3

  சிங்கப்பூரில் 2 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வருகை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்