SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக்

2019-12-22@ 00:23:12

கேடிஎம் நிறுவனத்தின் அங்கமாக செயல்படும் ஹஸ்க்வர்னா நிறுவனம் விரைவில் இந்தியாவில் தனது புதிய பைக் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. ஸ்வர்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 ஆகிய இரண்டு பைக்  மாடல்களை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டுவந்தது. கேடிஎம் 250 ட்யூக் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மாடல்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் 2020 பிப்ரவரி மாதத்தில் இப்புதிய ஹஸ்க்வர்னா 250 பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், அடுத்து ஒரு புதிய ஸ்வர்ட்பிளேன் பைக்கை ஹஸ்க்வர்னா வெளியிட்டு இருக்கிறது. இந்த  பைக், கேடிஎம் 200 ட்யூக் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாடலாக வர இருக்கிறது. இது உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செல்லும்.

 கேடிஎம் 200 ட்யூக் பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 200 சிசி லிக்யூடு  கூல்டு இன்ஜின்தான் புதிய ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கிலும் இடம்பெற்றிருக்கும். இந்த இன்ஜின் 26 எச்பி பவரை அளிக்கவல்லது. இந்த இன்ஜின் சிறிய மாறுதல்களுடன் ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்ட புதிய ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கில் இருக்கும் அதே அலாய் வீல்கள்தான் இப்புதிய மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், ஸ்வர்ட்பிளேன் 401 பைக்கில் இருக்கும் வயர் ஸ்போக் வீல்கள் இந்த  மாடலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கில் பக்கவாட்டில் சைலென்சர் குழாய் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஸ்வர்ட்பிளேன் 200 பைக்கில் இன்ஜினுக்கு கீழ்பகுதியில்  பொருத்தப்பட்டு இருப்பது முக்கிய மாற்றமாக இருக்கும்.

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இப்புதிய ஸ்வர்ட்பிளேன் 200 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்வர்ட்பிளேன் 250 பைக்கைவிட விலை குறைவாக இருக்கும் என்பதால், கூடுதல்  வாடிக்கையாளர் வட்டத்தை பிடிப்பதற்கான வாய்ப்பை ஹஸ்க்வர்னா நிறுவனம் பெற முடியும். கேடிஎம் 200 ட்யூக் பைக்கைவிட ரூ.10,000 வரை கூடுதல் விலையில் ஸ்வர்ட்பிளேன் 200 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்படும். கேடிஎம்  பைக்குகள், வழக்கத்தில் இருந்து மாறான தனித்துவமான டிசைன், செயல்திறன்மிக்க இன்ஜின், தொழில்நுட்ப அம்சங்களுடன் மிக சவாலான விலையில் வந்ததால், பெரிய ஹிட் அடித்தது. அதே பாணியில், மிகவும் தனித்துவமான டிசைன்  அம்சங்களுடன் ஹஸ்க்வர்னா பைக்குகளும் இந்தியர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

  • 24-02-2020

    24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2020

    23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • theepam2020

    மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

  • 22-02-2020

    22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்