SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடக்க வேண்டும்

2019-12-21@ 00:20:34

நாட்டில் சமூக சீர்கேடுகள் வரம்பு மீறி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது டாஸ்மாக். இரண்டாவது சமூக வலைதளம். தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் கம்பெனி வியாபாரத்தை பெருக்க இணையதள இணைப்பு வசதியை குறைந்த கட்டணத்துக்கும், இலவசமாகவும் வாரி வழங்குகிறார்கள். இதனால் சிறுவர்கள், மாணவர்கள், மாணவிகள் பெரியவர்கள், இல்லத்தரசிகள் என்று அனைவரும் எந்நேரமும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கின்றனர். இந்த பழக்கம் நாளடைவில், புதிது புதிதாக எதையோ தேட அவர்களை தூண்டுகிறது. அப்படி தெரிந்தும், தெரியாமலும் இவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அதன் பிறகு தங்களுக்கு கிடைக்கும் தனிமையை பயன்படுத்தி ஆபாச படங்களை பார்ப்பதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். புரிந்தும், புரியாமல் இருக்கும் பாலியல் தொடர்பான விஷயம் தொடர்பான ஈர்ப்பில் சமூக வலைதளத்தில் பார்த்ததை செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதன் விளைவு தான் ஆங்காங்கே பெண் சிசு முதல் வயது வரம்பில்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருக காரணமாக மாறிவிட்டது. இது போன்ற குற்றங்களில் 6லிருந்து அறுபதை தாண்டியவர்களும் ஈடுபடுகிறார்கள்.

அடிமனதில் தேங்கி கிடக்கும் காமம் என்ற ஒரு விஷயம் திருமணத்துக்கு பிறகு சிந்திக்க வேண்டிய ஒன்று என்பது போய் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறி மனநோயாளியாக மாறிவிட்டவர்கள் ஏராளம். இந்தியா போன்ற நாடுகளில் படிப்பு, அதன் பிறகு நல்ல வேலை, கை நிறைய சம்பளம், பல்வேறு குடும்ப சுமை இவற்றையெல்லாம் கடந்து தான் திருமணம், பாலுறவு என்ற நிலை இருப்பதால் ஆண், பெண் இருபாலரிடமும் ஒருவித செக்ஸ் வறட்சி நிலவி வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் உலவும் ஆபாச படங்கள் தீனி போடுவதாக அமைவதால் குடும்பம் சிதைகிறது. கணவன்-மனைவி உறவில் விரிசல், தகாத தொடர்புகள் என்று குற்றங்கள் பெருகுவதோடு மட்டுமின்றி பலாத்கார கொலைகள் அதிகரித்துவிட்டன. அப்பாவி சிறுமிகள் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆபாச படங்களை மொபைல்போன்களில் டவுன்லோடு செய்து பார்த்து ரசிப்பவர்கள், பகிர்பவர்கள் குறித்த பட்டியலை தமிழக காவல்துறை தயாரித்து மாவட்டவாரியாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

இனி ஆபாச வலைதளங்களை தங்கள் செல்போனில் தெரியாமல் சொடக்கினால் கூட போலீஸ் கண்காணிப்பில் இருந்து தப்பமுடியாது. இது போன்று ஆபாசபடங்களை பார்ப்பவர்களை காவல்துறை கைது செய்து தண்டிக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் குழந்தைகளின் ஆபாசபடத்தை பார்த்ததாக வாலிபர் ஒருவரை திருச்சியில் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தமிழக காவல்துறை அதிகாரியை சந்தித்த மாணவிகள் சிலரும், தாங்கள் தெரியாமல் ஆபாச படங்களை பார்த்துவிட்டோம் என்று மன்னிப்பு கேட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது. இனியாவது  இளைஞர்களும், மாணவிகளும் மனதை அதன்போக்கில் விடாமல் அடக்க ேவண்டும் இல்லாவிட்டால் காவல்துறை அடக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • varaverppu stage20

  உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

 • america athipar2020

  காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

 • trumb12020

  இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

 • school20

  ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

 • jaya20

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்