SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டோமொபைல்

2019-12-15@ 00:28:37

2020ல் ஹூண்டாய் களமிறக்கும் கார்கள்: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமாக ஹூண்டாய் நிறுவனத்தின் 2020-ம் ஆண்டின் அறிமுக மாடல் கார்கள் இதோ...

ஹூண்டாய் வெர்னா பேஸ் லிப்ட்:
2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த ஹூண்டாய் வெர்னா பேஸ் லிப்ட் மாடலில் உட்புறம், வெளிப்புறம் மற்றும் இன்ஜின் என அனைத்து பாகங்களும் அப்டேட்டாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த காரின் முன்புறம் மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் உள்ளது. இதன் முன்புற பம்பர் மற்றும் ஹெட்லைட் அமைப்பு இதுவரை எந்த காரிலும் இல்லாத டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களும் புதிய வடிவில் மாற்றம் பெற்றுள்ளன.

ஹூண்டாய் எக்ஸ்செண்ட் (அவ்ரா):
ஹூண்டாய் எக்ஸ்செண்ட் மாடலின் அடுத்த வெர்சன் கார் அவ்ரா என்ற பெயரில் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. ஹூண்டாய் ஐ10 நியாஸ் மாடலின் தொழில்நுட்பங்களுடன் வெளியாகும் இப்புதிய கார், தனி நபர் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சப்-4 மீட்டர் பிரிவில் இந்த கார் அறிமுகமானாலும் அகலத்திலும், உயரத்திலும் நன்கு பெரியதாகவே உள்ளது. முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ் போன்ற கார்களுடன் போட்டியிடும்.

ஹூண்டாய் சொனாட்டா:
2018-ம் ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட ஹூண்டாய் லீ பில் ரப் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்தான் ஹூண்டாய் சொனாட்டா. இந்நிறுவனத்தால் அடுத்த ஆண்டு விற்பனையை துவங்க உள்ள இந்த கார் புதிய டிசைனில் கிரில் அமைப்பு, 4 அறைகள் கொண்ட ஹெட்லைட், முன்புற பம்பரில் ‘’யு’’ வடிவிலான குரோம் என அசத்தலான அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியிலேயே விற்பனையை இந்த செடான் ரக கார் துவங்கிவிடும் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஆட்டோ எக்ஸ்போவில்தான் இதன் அறிமுகம் நடைபெற உள்ளது. மேலும், இந்த காரின் ஹைப்ரீடு இன்ஜின் வேரியண்ட்டில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்தை இன்ஜினுக்கு வழங்கும் வகையில் சோலார் பேனல் பொருத்தும் திட்டமும் ஹூண்டாய் நிறுவனத்திடம் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா -2ம் தலைமுறை:
வாடிக்கையாளர்களின் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ஹூண்டாய் கிரெட்டாவின் இரண்டாம் தலைமுறை கார் விளங்குகிறது. அடுத்த ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக உள்ள இந்த கார், கியா செல்டோஸ் மாடலின் அடிப்படையில் சிறிய அளவிலான எஸ்யூவி ரக காராக வெளியாக உள்ளது. மேலும், தற்போதைய மாடலைவிட கம்பீரமாகவும், புதிய மாடர்ன் டிசைன்களை கொண்டதாகவும் உள்ளது. சீனா மார்க்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகிவிட்ட இந்த காரின் சிறப்பே இதன் முன்புற கிரில் மற்றும் விளக்கு அமைப்புகள்தான். தற்போதைய மாடல்போல் பக்கவாட்டு தோற்றத்தை கொண்டிருந்தாலும், இந்த காரின் பின்புற பகுதி புதிய காருக்கான தோற்றத்தை கொடுக்கிறது.

ஹூண்டாய் எலைட் ஐ20 பேஸ் லிப்ட்:
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் எலைட் ஐ20 மாடலின் அடுத்த வெர்சனை 2020ல் அறிமுகப்படுத்த உள்ளது. மாருதி பலேனோ காருக்கு போட்டியாக அறிமுகமாக உள்ள இந்த காரில் முந்தைய மாடலைவிட புதிய டிசைனில் வெளிப்புறம், கம்பீரமான கிரில், நேர்த்தியான ஹெட்லைட் அமைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்போர்ட்டியான பம்பர், தற்போதைய மாடலைவிட இன்னும் டைனாமிக் தோற்றத்தில் உள்ளது. இந்த காரின் பக்கவாட்டுகள், ஸ்டைலிஷான எல்இடி லைட்களை கொண்ட பின்புறம் உள்ளிட்டவையுடன் எலைட் ஐ20 மாடலின் இந்த பேஸ் லிப்ட் வெர்சன் உள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளை இந்த கார் கொண்டுள்ளது.
மேற்கண்ட கார்களின் விலை விவரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

ஹூண்டாய் ஐ10 நியாஸ் என் லைன்:
ஹூண்டாய் நிறுவனத்தின் என்-லைன் மாடல்கள் இதுவரை இந்திய சந்தையில் இறக்குமதியானது இல்லை. அதனால், ஐ10 மாடலின் என்-லைன் காரை அடுத்த ஆண்டில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் ஹூண்டாயின் இந்த என்-லைன் கார் அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த காரின் விற்பனை, அறிமுகத்திற்கு சில மாதங்களுக்கு பிறகுதான் துவங்கும் என கூறப்படுகிறது.

வருகிறது போக்ஸ்வேகன் டி-ராக் மாடல்:
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான போக்ஸ்வேகன் இந்திய சந்தையில் தனது அடுத்த தயாரிப்பு மாடலான டி-ராக் காரை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது. இப்புதிய கார் வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் முன்புற கிரில் அமைப்பு நேர்த்தியாகவும், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் பக்கவாட்டிலும் கொண்டுள்ளது. பின்புற பம்பர்ஸ் மிகவும் முரட்டுத்தனமான வடிவிலும், இதற்கு மத்தியில் ஸ்கப் பிளேட்டுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரை சுற்றிலும், சக்கரங்களின் அச்சுக்கு இணையாக கருமையான நிறத்தில் பார்டர் மிகவும் தடிமனாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில், 11.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர், 8 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டேஸ்போர்டு உள்பட கேபின் முழுவதும் கருமையான நிறம் கொண்டுள்ளது. காரின் வெளிப்புற நிறத்தில் டேஸ்போர்டிற்கு பார்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 150 பிஎச்பி பவரை நிலையான 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் வெளியிடும் திறன் கொண்டது. மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தில் உள்ள போக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த டி-ராக் கார், ஜீப் காம்பஸ், கியா செல்டோஸ் மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஸ்கோடா காரோக் போன்ற மாடல்களுடன் போட்டியிட உள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்