SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேவாலயங்களில் வர்ணம் பூச்சு, மின் விளக்கு அலங்காரம்: கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குமரியில் களை கட்டியது

2019-12-14@ 08:07:08

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி உள்ளன.கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி உள்ளன. வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.  மாவட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவின் பிரதான அடையாளமான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை குமரி மாவட்ட மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

குறிப்பாக பொது இடங்களில், ஆலய வளாகங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர வீடுகளில் சிறு அளவிலான குடில்கள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இளைஞர்களும், சிறார்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குத் தேவையான தருவைப் புற்களை மலையோரப் பகுதிகள் மற்றும் கால்வாய் கரையோரங்களுக்குச் சென்று இளைஞர்கள் சேகரித்து வருகின்றனர். அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாக  நடந்து வருகின்றன. நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல், புதுக்கடை, தக்கலை, அருமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் ஜொலிக்க தொடங்கி உள்ளன.இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது.

அதை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதற்காக பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நாகர்கோவிலில் மணிமேடை பகுதி, டதி ஸ்கூல் சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும்முரமாக விற்பனையாகிறது. குடில் அமைக்கும் பொருட்களும் இந்த ஆண்டு பல வித அளவுகளில் கண்ணை கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஜவுளி கடைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். டிசம்பர் மாதம் பிறந்ததில் இருந்து, கொண்டாட்டத்துக்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆலயங்கள் புதுப்பிப்பு பணிகளும் நடக்கின்றன. வர்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் என தேவாலயங்கள் ஜொலிக்க தொடங்கி உள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colum_ellaiii1

    எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், கொலம்பியா வீரர்களுடன் இணைந்து அமெரிக்க பாரா 'ட்ரூப் வீரர்கள் பயிற்சி

  • chinaaa_scieen11

    உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸிற்கு இதுவரை 132 பேர் பலி : வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 6,000 பேருக்கு தீவிர சிகிச்சை

  • marathon_dogggg1

    482 கி.மீ.தூரத்தை கடக்க அசுர வேகத்தில் ஓடி வரும் நாய்கள்… அமெரிக்காவில் களைகட்டிய மாரத்தான் போட்டி : பார்வையாளர்கள் உற்சாகம்

  • 29-01-2020

    29-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • coronaa_chinnnaa1

    ஆள் நடமாட்டமின்றி பேய் நகரமாக மாறிய சீன மாகாணம் : கொரோனோ வைரஸால் மக்களின் பயத்தை காட்டும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்