SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குஜராத் மாநிலம் அருகே கிராமமக்களை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை

2019-12-12@ 11:35:35

அமரேலி: 15-க்கும் மேற்பட்ட நபர்களை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுகொன்ற உள்ளனர். குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் கால்நடைகளை தாக்கிய சிறுத்தையை நேற்று இரவு வனத்துறையினர் சுட்டுகொன்ற பிடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை வந்துள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட கிராம மக்கள் அச்சம் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று அமரேலி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாட்டுத் தொழுவம் அருகே யூகலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கியிருந்ததை கிராமமக்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறையினருக்கு கிராமமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அங்கு இருள்சூழ்ந்ததால் வனத்துறையினர் அந்த சிறுத்தையை சுட்டுக் கொன்றுள்ளனர்.மேலும் அந்த பகுதியில் நடமாடிய  சிறுத்தைகள் சிலவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்