SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேரும் திகார் சிறைக்கு மாற்றம்

2019-12-10@ 15:04:26

டெல்லி: நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேரும் டெல்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து எந்நேரமும் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் பவன்குமார் குப்தா, மேகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்சய் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வினய் ஷர்மா என்பவன் மட்டும் கருணை கோரி குடியரசு தலைவரிடம் மனு அளித்தான். அந்த கருணை மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்டார். இதனை தொடர்ந்து, கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களில் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது விதியாகும். இந்நிலையில் 4 பேரும் திடீரென திகார் சிறைக்கு மாற்றப்பட்டிருப்பதால் எந்நேரமும் அவர்கள் தூக்கிலிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, திகார் சிறையில் 4 குற்றவாளிகளும் கடும் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நால்வரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறை கைதிகளால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரை தூக்கிலிட பணியாளரை திஹார் சிறை ஏற்பாடு செய்கிறது. திஹார் சிறையில் தூக்கிலிடும் பணியாளர் இல்லாததால் பிற சிறைகளில் இருந்து பணியாளரை வரவழைக்க நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூக்குக்கயிறு தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற பீகாரின் பக்ஜார் சிறை நிர்வாகத்திடம் 10 கயிறுகள் கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்