SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாம்பு கபே

2019-12-10@ 12:34:29

நன்றி குங்குமம் முத்தாரம்

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வதெல்லாம் மலையேறிப்போய்விட்டது. இன்று வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வணிக சிம்ப ளாக மாறிவிட்டது பாம்பு.இதற்கு உதாரணம் தான் இந்தச் சம்பவம். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த பாம்பு கபேவை திறந்திருக்கின்றனர். இங்கு டேபிளுக்கு டேபிள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் பாம்புகளை வைத் திருப்பார்கள். பாம்பைப் பிடித்து விளையாடியபடி காபியைப் பருகலாம். காபிக்கு தனி பில்; பாம்பு விளையாட்டுக்கு ஸ்பெஷல் பில்!

‘‘நான் ஒரு இயற்கை ஆர் வலன். பாம்புகள் என்றாலே மோசமானவை என மக்களுக்கு இருக்கும் பொதுப்புத்தியை மாற்றத்தான் இப்படியொரு கபே துவங்கினேன்!’’ என்கிறார் ஹிசாமிட்சு கனேகு. தனது காபி ஷாப்புக்கு ‘டோக்கியோ ஸ்நேக் சென்டர்’ என்றே பெயரிட்டிருக்கிறார். வாடிக்கையாளர்களோடு உறவாட மொத்தம் இங்கே 35 பாம்புகளை வளர்க்கிறார் கனேகு.

அனைத்துமே விஷ மற்ற பாம்பு வகை கள். சுலபத்தில் யாரையும் கடிக்காது; கடித்தாலும் அப்படி ஒன்றும் ஆபத்தில்லை. இந்தப் பாம்புகள்தான் அங்கே வாடிக்கையாளர் சேவை செய்யும் பணியாள். அட்டெண்டன்ட்ஸ் என்றே அவற்றை அன்போடு அழைக்கிறார்கள்.

காபியை ஆர்டர் செய்கிறவர்கள், டேபிளில் இருக்கும் பாம்பைப் பார்த்து ரசித்துக்கொண்டே காபியை உறிஞ்சலாம். பாம்பு பற்றிய தகவல்களை அங்கேயே படிக்கலாம். தைரியமும் பணமும் இருந்தால் பாம்பை கையில் எடுத்து கொஞ்சலாம்.

பெரும்பாலும் கார்ன்  ஸ்நேக் எனப்படும் வளர்ப்புப் பாம்பு வகைகளே பல வண்ணங்களில் செயற்கை பிரீடிங் செய்யப்பட்டு இங்கே வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு கலர் காம்பினேஷன்களில் கலக்கும் இவற்றோடு பழகவும் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் இளைஞர்கள் இங்கே படையெடுத்து வருகிறார்களாம். இந்தப் படை பாம்புக்கு அஞ்சாது போல!


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesu_kudaamuu1

  இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

 • nirmalaa_alawaa1

  டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

 • telanagana_leopardd1

  தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

 • 21-01-2020

  21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • thanajai_mmm

  சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்