SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காதலுக்கு எதிர்ப்பு விவகாரம் கோஷ்டி மோதலில் 8 பேருக்கு வெட்டு

2019-12-10@ 00:18:58

தண்டையார்பேட்டை: வியாசர்பாடியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. வியாசர்பாடி உதயசூரியன் நகரை சேர்ந்தவர் காரல்மாக்ஸ் (23). அதே பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (19). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததால், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஊர் தலைவர் முன்னிலையில் பஞ்சாயத்து செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரண்டு குடும்பத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கத்தியாலும் வெட்டிக் கொண்டனர். இதில் சுப்புலட்சுமியின் உறவினர்கள் 5 பேரும், காரல்மாக்ஸ் உறவினர்கள் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எம்கேபி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thodar vanmurai20

    கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

  • brezil20

    பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

  • vimaanam20

    பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

  • indonesiya vellam20

    வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்