SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்நாட்டு போட்டிகளில் இதுவரை நடக்காத அளவுக்கு டிஎன்பிஎல் ஆட்டத்தில் ரூ225 கோடி சூதாட்டம்?... ஏசியு விசாரணை குழுவின் அறிக்கையில் பகீர்

2019-12-08@ 14:41:20

சென்னை: இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக்கில் நடந்த சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏசியு) விசாரணை நடத்தியது. அதில், துடி பேட்ரியேட்ஸ் (தூத்துக்குடி) மற்றும் மதுரை பாந்தர்ஸ் இடையே இந்தாண்டு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியில் 24 மில்லியன் (சுமார் 225 கோடி ரூபாய்) சூதாட்டம் நடந்துள்ளதாக ஏசியு தரப்பில், பிசிசிஐ-க்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடக்காத அளவு பெரும் சூதாட்டமாக இதனை கூறுகின்றனர். கடந்த வாரம், பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி, டிஎன்பிஎல் உரிமையாளர்கள் 2 பேரை சூதாட்ட புகார் உறுதி செய்யப்பட்டதால் இடைநீக்கம் செய்தார். அதாவது, உள் விசாரணைக் குழுவின் ஆலோசனையின் பேரில் ‘துடி பேட்ரியாட்சின்’ இரு இணை உரிமையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சூதாட்ட புகார் தொடர்பாக, இந்திய அணி வீரர், ஐபிஎல் வீரர், ராஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும், டிஎன்பில் அணி உரிமையாளருடன் சட்டவிரோத ஒப்பந்தத்தின் மூலம் வீரர்கள் ‘மேட்ச் பிக்ஸிங்’ செய்வதும் விசாரணையில் ெதரிந்தது. ‘பந்தயத்தில் வெற்றி பெறும் வகையில் அணியை நடத்துகிறார்கள்’ என்று விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது. பிரீமியர் நேஷனல் டி20 போட்டியின் இவ்விவகாரம் ெதாடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘‘சமீபத்திய சையத் முஷ்டாக் அலி டிராபியில் சம்பந்தப்பட்ட ஒரு வீரர், ‘புக்கி’களை அணுகி உள்ளது உறுதியாகி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, சூதாட்ட புகாரால் கர்நாடக பிரீமியர் லீக் (கேபிஎல்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டி20 லீக் முழுவதும் ஊழல் தொடர்ந்தால் ஏசியு வலுப்படுத்தப்படும். தற்போதைய முடிவுகள் அடுத்த ஆண்டு மதிப்பீடு செய்யப்படும். நாங்கள் ஊழல் எதிர்ப்பு முறையைக் கையாள்கிறோம்.

சிறந்த ஊழல் எதிர்ப்பு வாதிகளின் மூலம் இதனை பலப்படுத்த வேண்டும்’’என்றார். முன்னதாக, சூதாட்ட புகார் தொடர்பாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார், கேபிஎல் ஊழல் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக பலரை கைது செய்துள்ளது. இதில் மிக முக்கியமாக கர்நாடக அணியின் முன்னாள் கேப்டன் சி.எம் கவுதம் கைது செய்யப்பட்டுள்ளார். பெலகாவி பாந்தர்ஸ், அஸ்பக் அலி தாரா அணி உரிமையாளர்களையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • iyesu_kudaamuu1

  இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

 • nirmalaa_alawaa1

  டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

 • telanagana_leopardd1

  தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

 • 21-01-2020

  21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • thanajai_mmm

  சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்