SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

2019-12-08@ 14:35:46

*தொல்லியல் துறையினர் நாளை ஆய்வு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் நாளை ஆய்வு செய்ய உள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். மதுரை சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நகரில் உள்ள காவல்நிலையம் பின்புறம், பெரிய கண்மாய் பகுதியில் நேற்று மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது 4 அடி உயரமுள்ள முதுமக்கள் தாழி இருந்தது. மேலும், இப்பகுதியில் அதிக முதுமக்கள் தாழி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட தாசில்தார் பழனிச்சாமி, இதுகுறித்து விருதுநகர் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் நாளை கண்மாய் பகுதியில் முதுமக்கள் தாழி குறித்து ஆய்வு செய்வதாக  தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்