SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட்5 அறிமுகம்

2019-12-05@ 14:51:06

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அனைத்து சாதனங்களையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்சமயம் இந்நிறுவனம் இந்தியாவில் பேண்ட் 5 ஃபிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஜீன் மாதத்தில் அறிமுகம் செய்த எக்ஸ்பேண்ட் 3 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலில் 0.96 இன்ச் கலர் ஸ்கிரீன் இதய துடிப்பு சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம். இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடல் பொதுவாக 0.96 இன்ச் 160x80 பிக்சல் TFT-LCD ஸ்கிரீன் வசதியுடன் வெளிவந்துள்ளது,  

மேலும் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் ஐ.ஒ.எஸ் 9.0 மற்றும் அதன்பின் வெளியான சாதனங்களுடன் வேலை செய்யும்.  இந்த சாதனம் ஸ்டெப் கவுண்ட், ஸ்லீப் டிராக்கிங்,கலோரி கன்சம்ப்ஷன் டேட்டா, டிஸ்பிளே நேரம்/தேதி அலாரம் கடிகாரம், ஸ்மார்ட்போன் நோட்டிஃபிகேஷன் போன்ற நன்மைகளையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் ப்ளூடூத் 4.0, செடன்ட்டரி ரிமைண்டர், இதய துடிப்பு சென்சார்,3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்,வாட்டர் ரெசிஸ்டண்ட்உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம். குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த சானம்.  இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக உள்ளது, பின்பு பிளாக், புளூ மற்றும் ரெட் நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இதன் விற்பனை துவங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்