SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நோக்கியா!

2019-12-04@ 17:48:55

சியோமியை தொடர்ந்து நோக்கியா மொபைல் நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. நோக்கியாவின் 5ஜி ஸ்மார்டபோன் பியூர்டிஸ்ப்ளே, செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 4K UHD அல்ட்ரா வைடு வீடியோ வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய டீசரின் படி இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் புகைப்படங்களை எடுக்க மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

ஆப்டிமைஸ் செய்யப்பட்ட வடிவமைப்பு கொண்டிருக்கும் புதிய நோக்கியா ஸ்மார்டோபன் அதிக சூடாகாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். மேலும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போதும் நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனை அடுத்த வருடம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக எச்எம்டி குளோபலின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் கூறியதாக குவால்காம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesu_kudaamuu1

    இயேசு கிறிஸ்து திருமுழுக்கு பெற்ற நாள் கொண்டாட்டம் : ரஷ்யாவில் 53,000 பேர் புனித நீராடினர்

  • nirmalaa_alawaa1

    டெல்லியில் 'அல்வா' தயாரிப்புடன் மத்திய பட்ஜெட் ஆவண பதிப்பித்தல் பணியை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

  • telanagana_leopardd1

    தெலங்கானாவில் வீட்டு மாடியில் பதுங்கிய சிறுத்தை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு வனத்துறையிடம் பிடிப்பட்டது

  • 21-01-2020

    21-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • thanajai_mmm

    சாரங்க் ஹெலிகாப்டர்களின் சாகசங்களுடன் தஞ்சை விமான படைதளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் 6 சுகோய் 30 எம்.கே.ஐ. ரக விமானங்கள் இணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்