சிங்கப்பூரில் இருந்து விமானத்தில்

ரூ15 லட்சம் தங்க பிஸ்கட் கடத்திய வாலிபர் சிக்கினார்

கருத்துகள்


MORE VIDEOS

சென்னை: சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் சிங்கப்பூரில் இருந்து வந்த அனைத்து விமானங்களை யும் தீவிரமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது திருச்சியை சேர்ந்த மோகன் (32) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது சூட்கேஸ் மற்றும் பையை தீவிரமாக சோதித்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். பேன்ட் மற்றும் கோட்டில் ரகசிய பைகள் இருந்தன. அதில் 5 தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து மோகனை கைது செய்தனர். தங்க பிஸ்கட்களின் மொத்த எடை 500 கிராம். சர்வதேச மதிப்பு ரூ15 லட்சம் ஆகும். இதற்கு முன்பு இதுபோன்ற கடத்தல் சம்பவத்தில் இவர் ஈடுபட்டாரா? யாருக்காக கடத்தி வந்தார் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Chennai: gold smuggled from Singapore to Chennai Airport Customs officers received confidential information. Whereupon officials yesterday on the first night, all flights from Singapore also be actively monitored. In this case, Air India flight from Singapore yesterday at 2.30 in Chennai. The officers checked the passengers. The Chennai-based Mohan (32) was a doubt on the authorities. Cutkes and actively checking his bag. There is nothing in it. Checked and then taken to a separate room. Band and secret bags were on the line.

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

வாசகர் பெயர்
நகரம்
மின்னஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
  
முக்கிய குறிப்பு:தினகரன் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு தினகரன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு dotcom@dinakaran.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
Advertisement

செய்திகள்

Advertisement

மகளிர்

சிறப்புப் பேட்டி மியூஸிக் சீசன் தொடங்கிவிட்டது. சபாக்களில் கூட்டம் அலைமோதும். அதுவும் நித்யஸ்ரீ பாடும் அரங்கினுள் நிற்கக்கூட இடமிருக்காது. அந்தளவுக்கு  ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கும் கர்நாடக ...

இனிய இல்லம்: தமிழினிதோட்டமென்பது இயற்கைத் தூரிகையால் வரையப்பட்ட லாண்ட்ஸ்கேப்பிங் ஓவியமே! - வில்லியம் கென்ட்‘‘சார்... நல்லாயிருக்குறீங்களா? நம்ம செடிகள்லாம் எப்படி இருக்குதுங்க? நல்லா கவனிச்சிக்கோங்க சார்...’’ ...

Advertisement

தேர்தல் செய்திகள்

Advertisement

மருத்துவம்


Advertisement


Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran

அறிவியல்

20

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தெளிவு
கவலை
வெற்றி
பரிவு
நலம்
நட்பு
பாராட்டு
நற்செயல்
ஆர்வம்
ஆதரவு
சுகம்
சுபம்
Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran