SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 வடமாநில வாலிபர்கள் கைது : 15 கிலோ கஞ்சா பறிமுதல்

2019-12-03@ 00:25:14

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 4 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்தன. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே இரவு நேரங்களில் மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழகம் அருகே போலீசார் ரகசியமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, 4 வடமாநில வாலிபர்கள், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் அதிரடியாக அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

 அதில், மேற்கு திரிபுரா மாநிலத்தை சேர்ந்த குர்ஷித் மிகா (28), பிலால் உசேன் (30), அன்வர் உசேன் (22), இமான் உசேன் (30) என தெரிவந்தது. இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னையின் பல இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 பொட்டலங்கள் கொண்ட 15 கிலோ கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அண்ணாநகர்: அண்ணாநகர் ரவுண்டானா எதிரே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டபோது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரிந்தது. இதுதொடர்பாக ஆட்டோவில் வந்த ஐசிஎப் காந்தி நகரை சேர்ந்த பாலு (30), புரசைவாக்கத்தை சேர்ந்த மகாராஜா (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, சென்னையில் மாணவர்களுக்கு விற்பனை செய்வது தெரிந்தது. இவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.திருவொற்றியூர்: மாதவரம் போலீசார் நேற்று அதிகாலை  மாதவரம் மேம்பாலம்  அருகே ரோந்து சென்றபோது, அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அதில் வந்த பெண், 2 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது. விசாரணையில், வண்ணாரப்பேட்டை ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த பிரியலஷ்மி (22), பாடி ராஜா தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சம்சுதீன் (36) என்பதும், இவர்கள் பிரபல கஞ்சா வியாபாரிகள் என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து,  கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஆட்டோ மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்