மாற்றுத்திறனாளிகள் தினம் பொருளாதார, சமூக ரீதியாக ஏற்றம் பெற்றிட முதல்வர் வாழ்த்து
2019-12-03@ 00:25:12

சென்னை: பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டிசம்பர் மாதம் 3ம் தேதி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது, போக்குவரத்து நெரிசல்மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த இனிய நாளில், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சுதந்திரமாக வாழ்வதற்கு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கு: 3 மாதங்களுக்கு பின் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கம்
சென்னை கோயம்பேடு சந்தையில் மீண்டும் உயர்ந்த வெங்காயத்தின் விலை: சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 ரூபாய்க்கு விற்பனை
புதுச்சேரி கவர்னரின் அதிகாரம் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சரவண பவன் ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கி தந்த ஜீவஜோதி விரைவில் பாஜவில் ஐக்கியம்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது