SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுதல் கட்டிடத்திற்காக மரங்களை வெட்டுவதா டெல்லியைபோல் சென்னையும் மாசடைந்து விடக்கூடாது : உயர் நீதிமன்றம் கருத்து

2019-12-03@ 00:02:32

சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடத்தை அதே வளாகத்தில் மரங்கள் இல்லாத மாற்று இடத்தில் கட்டுவது குறித்து ஆய்வு செய்து தகவல் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 75க்கும் மேற்பட்ட மரங்கள்உள்ளன. பல ஆண்டுகளாக இருக்கும் இந்த மரங்களை வெட்டி அகற்றிவிட்டு, அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், கஜா புயல் கண் மருத்துவமனை வளாகத்தில் இருந்த பல மரங்களை சாய்த்துவிட்டது. மீதமுள்ள மரங்களில் பலவகையான பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வருகின்றன.  எனவே, இந்த மரங்களை வெட்ட தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.சரவணன் ஆகியோர் கொண்ட சுற்றுச்சூழல் வழக்குகளை விசாரிக்கும் டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த மாதம்விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மரங்களை வெட்டாமல் புதிய கட்டிடம் கட்ட முடியுமா, மாற்று இடம் உள்ளதா, மரங்களை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க முடியுமா என்று அரசு வக்கீலிடம் கேட்டனர். இதுகுறித்து விளக்கமாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய அமர்வில் விசாரணக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, அதே வளாகத்தில் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் உள்ள இடம் உள்ளது. அந்த இடத்தில் கட்டிடத்தை கட்டலாம் என்றார். இதை கேட்ட நீதிபதிகள், கட்டிடம் கட்டுவது வளர்ச்சி திட்டம்தான். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் மரங்கள் அழிக்கப்படக்கூடாது. கண் மருத்துவமனை உள்ள இடம் சென்னையின் இதயம் போன்ற இடம். தற்போது அங்கு மட்டும்தான் மரங்கள் அதிகம் உள்ளது. டெல்லியை போல் சென்னையும் மாசடைந்துவிடக் கூடாது. எனவே, அதே வளாகத்தில் மரங்கள் குறைவாக உள்ள பகுதியில் கட்டிடத்தை கட்டுவது குறித்து ஆய்வு செய்து வரும் 4ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்