பெஸ்ட் கேட்ஜெட்ஸ்
2019-12-02@ 14:12:34

நன்றி குங்குமம் முத்தாரம்
‘குழந்தையைப் போல் தூங் குங்கள்’ என்ற அடைமொழியுடன் இந்த வருடம் வெளியாகிசக்கைப்போடு போட்டிருக்கிறது லெனோவாவின் ஸ்மார்ட் கிளாக். இதன் வடிவமே மனதை அள்ளுகிறது. கூகுள் அசிஸ்டெண்ட்டுடன் இயங்குவதால் இதில் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அலாரம் செட் செய்துவிட்டால் சரியான நேரத்தில் உங்களை எழுப்பி விடுவதோடு வீட்டிலுள்ள மற்ற ஸ்மார்ட் டிவைஸ்களையும் இதனால் கட்டுப்படுத்த முடி யும். இந்த கடிகாரத்திலேயே விருப்பமான பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம்.
டிஜிட்டல் நோட்பேட்
பள்ளிக்குழந்தைகள், எழுத்தா ளர்கள், ஓவியர்களை மனதில் வைத்து டிஜிட்டல் நோட்பேடை உருவாக்கியிருக்கிறது ‘ஹோப்ஸ்’ நிறுவனம். கேன்வாஸில் ஓவியம் வரைவது போலவும், நோட்புக்கில் குறிப்புகளை எடுத்துக் கொள்வதைப் போலவும் இந்த டிஜிட்டல் நோட்பேடில் நாம் செய்யலாம். 12 இன்ச் அளவுள்ள இதனை எங்குவேண்டுமானாலும் எடுத்துச் செல்ல முடியும். அமேசானில் இதன் விலை ரூ.1,199.
மேஜிக்கல் மலர்க் குவளை
நம்மைக் கவர்ந்திழுக்கிறது இந்த மலர்க் குவளை. இதிலிருக்கும் செடியின் ஒரு இலையைத் தொட்டவுடன் பாடல் ஒலிக்கிறது. இன்னொரு இலையைத் தொட்டவுடன் பச்சை வண்ண விளக்கு ஒளிர்கிறது. இலையைத் தொடத் தொட பியானோ போல இசைக்கிறது. இந்த மலர்க் குவளையிலிருந்து பிடித்த பாடல்களைக் கேட்க முடியும். இதற்காகவே புளூடுத் ஸ்பீக்கரும் இதிலுள்ளது. இந்த மியூசிக்கல் குவளையின் விலை ரூ.739.
கிளாக் ஃபேன்
லேப்டாப்பின் முன்னாடி உட்கார்ந்துகொண்டு சில நிமிடங்கள் இருந்தாலே போதும். உடம்பும் மனதும் ஃபேன்காற்றைத் தேடும். அப்போது அருகிலிருந்து யாராவது விசிறி வீசினால் நன்றாக இருக்கும் தானே. இதற்காகவே வந்திருக் கிறது கிளாக்ஃபேன். யூஎஸ்பி வசதியுடன் இருப்பதால் லேப்டாப்பில் பொருத்திக் கொள்ள முடியும். ஃபேன் ஓடும் போது நேரத்தையும் இதில் பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.
மேலும் செய்திகள்
ரூ.4,180 விலையில் நோக்கியா சி1!
16-இன்ச் மேக்புக் ப்ரோ
சென்ஹெய்சர் வயர்லெஸ் ஹெட்போன்
மின்னஞ்சல்களை Attachment முறையில் அனுப்பும் வசதி ஜிமெயிலில் அறிமுகம்
2020 முதல் பழைய மொபைல் போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது
வாட்ஸ் ஆப்பில் ரிமைண்டர் வசதியை தர புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது