SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுகவின் வழக்கை டிசம்பர் 5ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

2019-12-02@ 11:12:10

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான திமுகவின் வழக்கை டிசம்பர் 5ம் தேதி அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திமுகவின் கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி தேர்தல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. வார்டு மறுவரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடாது என திமுக வழக்கு தொடர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்த நிலையில் டிசம்பர் 28, 30 தேதிகளில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 6ம் தேதி ஆரம்பம் ஆகும் என்றும், டிசம்பர் 16ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் டிச.13ம் தேதி, வேட்புமனுவை திரும்பப்பெற டிச.18ம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடுத்த விசாரணை வருவதற்குள் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வழக்கை டிச.13ம் தேதிக்கு ஒத்திவைத்து. இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. இதனிடையே, கடந்த 29ம் தேதி திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நேற்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன் தொகுதி மறுவரையறை  சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட வேண்டும்.

அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அனைத்து பணிகளும் முடிக்க வேண்டும். இதில் ஏற்கனவே தொகுதி மறுவரையறை மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீது இன்னும் இறுதி தீர்ப்பு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிப்பாணையை வெளியிடக்கூடாது. இது குறித்து தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை இன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கூறி திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருந்தது.  இதனை தொடர்ந்து, திமுக தாக்கல் செய்த உள்ளாட்சி தேர்தல் வழக்கை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கியிருந்தார். அதன்படி, இந்த வழக்கை டிசம்பர் 5ம் தேதி விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்