SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 மாதமாகப் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை டெலிட் செய்யும் ட்விட்டர்!

2019-11-27@ 16:39:47

கடந்த ஆறு மாதமாகப் பயன்பாட்டில் இல்லாத ட்விட்டர் கணக்குகளை டெலிட் செய்ய இருக்கிறது ட்விட்டர் நிறுவனம். டிசம்பர் 11க்குள் லாகின் செய்யப்படும் ட்விட்டர் கணக்குகள் மட்டுமே தப்புமென்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இது போன்ற நடவடிக்கையை ட்விட்டர் எடுப்பது இதுவே முதல்முறை ஆகும். ட்விட்டரின் கொள்கைகள் மாறி உள்ளன. வெகுநாட்களாக ட்விட்டர் கணக்குகளைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள், இந்த கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாகக் கருதப்படுகிறார்கள். இதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுக்க இருப்பதாகக் கூறுகிறது ட்விட்டர் நிறுவனம்.

செயலற்ற கணக்குகளை ரத்து செய்வதன் மூலம், தளத்தில் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை மூலம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து ட்விட்டர் தளத்தை பயன்படுத்த வைக்க முடியும். இந்நிலையில், இந்த நடவடிக்கை மரணித்தவர்தகளின் அக்கவுண்ட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்