SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அயோத்தியில் பிரமாண்ட கோயிலை கட்ட வேண்டும்: காங்கிரஸ் விருப்பம்

2019-11-23@ 05:06:34

ஜெய்ப்பூர்: ‘‘அயோத்தியில் பிரமாண்டமான கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது,’’ என ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில் சச்சின் பைலட் நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எல்லோரும் வரவேற்கின்றனர். அயோத்தியில் பிரமாண்ட கோயில் கட்ட வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாம் மகிழ்ச்சியாக மதிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்வதை எல்லாரும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வழக்கை வைத்து கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் செய்தவர்கள், இந்த விஷயத்தால், அரசியல் ரீதியாக யாருக்கும் பயன் இல்லை என்பதை தற்போது உணர்ந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அரசின் பணிகளை மக்கள் விரும்புவதையும், காங்கிரஸ் தொண்டர்களின் கடின உழைப்பையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்