SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வார்னர் அபார சதம் ஆஸி. ரன் குவிப்பு

2019-11-23@ 04:33:57

பிரிஸ்பேன்: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆசாத் ஷபிக் 76, கேப்டன் அசார் அலி 39, ரிஸ்வான் 37, ஷான் மசூத் 27, யாசிர் ஷா 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 4, கம்மின்ஸ் 3, ஹேசல்வுட் 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இரண்டாம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்துள்ளது (87 ஓவர்). டேவிட் வார்னர் - ஜோ பர்ன்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 222 ரன் சேர்த்து அசத்தியது. பர்ன்ஸ் 97 ரன் (166 பந்து, 10 பவுண்டரி) எடுத்து யாசிர் ஷா பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
வார்னர் 151 ரன் (265 பந்து, 10 பவுண்டரி), லாபஸ்ஷேன் 55 ரன்னுடன் (94 பந்து, 6 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, ஆஸி. அணி 72 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்