SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக்கில் இருந்து எண்ணெய்!

2019-11-20@ 12:06:18

நன்றி குங்குமம் முத்தாரம்

இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் முக்கிய பிரச்னை களில் ஒன்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது. இதற்காக ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் தினமும் ஒரு மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் புதிதாக பூமியில் சேர்ந்துகொண்டே இருக்கிறது. இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் கழிவுகளை என்னென்ன பயனுள்ள பொருளாக மாற்றலாம் என்பதில் விஞ்ஞானிகளும், ரசாயனத் துறை நிபுணர்களும்  தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.

அப்படியே பயனுள்ள பொரு ளாக மாற்றினாலும் அதனால் எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்துவருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் போயிப்பெல்மயரும் அவரு டைய சகாக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை எண்ணெயாக மாற்ற முடியுமா என்று சோதனை செய்து வருகின்றனர். பாலிஎத்திலின் என்ற பிளாஸ்டிக்கின் பிணைப்புகளை அவ்வளவு சுலபத்தில் சிதைக்க முடியாது. இதை சிதைப்பதற்கான ரசாயன தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்தப் பிளாஸ்டிக்  பாலிமர்தான் சிதைக்கப்பட்டு திரவமாக மாறுகிறது. இந்தத் திரவத்தை பெட்ரோல் மாதிரி வாகனங்களுக்குப் பயன்படுத்த முடியுமா என்று சோதனை செய்து வருகிறது போயிப்பெல்மயரின் குழு. பிளாஸ்டிக்கில் இருந்து தயாராகும் பெட்ரோலில் கார்கள் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனால், அந்தக் காரில் இருந்து வெளியாகும் புகையால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கோணத்திலும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

காரணம், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால் அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் வரப்போகின்றன. தவிர, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கடுமையான சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு அவை தடை செய்யவும் படுகின்றன. இருந்தாலும் போயிப்பெல்மயர் இப்படிச் சொல்கிறார். ''பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிபுரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும்  ஒரு மதிப்பு உள்ளது. சுற்றுப்புறங்களில் அதை நாம் வீசி எறிந்துவிடக் கூடாது. அதை எரித்துவிடவும் கூடாது...’’


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10-12-2019

  10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hongkiong_1211

  அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • northesat_masothaa1

  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

 • dragon_shapes_chinaa1

  40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

 • puthucheri_cmnarayana

  சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்