நாராயணசாமி தாக்கு ஹிட்லரின் தங்கை கிரண்பேடி
2019-11-20@ 00:36:09

புதுச்சேரி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி அதிகாரிகளை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன். அவர்களிடம் பேசும்போது எனக்கு அவர்களின் நிலை தெரிகிறது. அதிகாரிகளை வசைபாடுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் கவர்னர் கிரண்பேடி ஈடுபடுகின்றார்.
மாநில மக்களையும், வளர்ச்சியையும் கவலைப்படாமல் தர்பார் நடத்துகின்றார். அமைச்சரவையை அவர் மதிப்பதே கிடையாது. விரைவில் இதற்கு நீதிமன்றம் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும். விரைவில் சிலர் சிறைக்கு செல்வார்கள். அரசு அதிகாரிகள் சிலர் கணக்கு தீர்க்கப்படுவர். நாங்கள் அனுமதி வாங்கிதான் சிங்கப்பூர் சென்றோம். தேவையில்லாத வேலையில் ஏன் தலையிடுகிறீர்கள். புதுச்சேரி மக்களை எவ்வளவு துன்புறுத்த வேண்டுமோ அவ்வளவு துன்புறுத்தும் செயலில் கவர்னர் ஈடுபடுகிறார். ஹிட்லரின் தங்கையாக செயல்படுகிறார் கிரண்பேடி. நாங்கள் யாருக்கும் அடிமை கிடையாது இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 14 மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : திமுக தலைமை தகவல்
எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் அதிமுக அடையப்போவது தோல்வி தான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5வது நாளாக 1,025 பேர் வேட்புமனு தாக்கல்
ஒன்றிய கவுன்சிலர் பதவி 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக எம்எல்ஏ கணவர்
சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் 1,000 கோடி ஊழல் குறித்து விசாரித்து அமைச்சர் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தல் 7 மாவட்டத்திற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது