கஜா புயலின்போது அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?: முதல்வரிடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு
2019-11-20@ 00:35:35

சென்னை: தமிழகத்தை 2018 நவம்பர் 16ம் தேதி தாக்கிய ‘கஜா’ புயலின்போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையின் நகலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ் முதல்வர் எடப்பாடியிடம் நேற்று வழங்கினார்.அந்த அறிக்கையில், கஜா புயலை முன்னிட்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள், அதற்கான அரசு, அரசு துறை சார்ந்தோர் மற்றும் சமூக ஆர்வலர்களின் பணிகள், சிறந்த நடவடிக்கைகள் மற்றும் இந்த பணிகள் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களால் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் ஆகிய தலைப்புகளில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் மத்திய அரசுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியின்போது, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
குடியிருப்பு பகுதியில் புதிய கல்குவாரிக்கு கடும் எதிர்ப்பு சுடுகாட்டில் பொதுமக்கள் உண்ணாவிரதம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகால மரத்தை வெட்டுவதா?: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
குளக்கரை சீரமைப்பு பணிக்காக 264 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்
சாலை, தெருவிளக்கு சீரமைக்க கோரி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்
சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த கழிப்பறை: மக்களுக்கு சுகாதார சீர்கேடு
கோடீஸ்வரி அறிமுக நிகழ்ச்சி: நடிகை ராதிகா பங்கேற்பு
15-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை