SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு 2 ஸ்கோச் விருது அறிவிப்பு

2019-11-20@ 00:34:38

சென்னை: சமுதாய காவல் மற்றும் சிறந்த காவல் பணி என இரண்டு பிரிவுகளை உருவாக்கிய சிவில் சப்ளை டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு இரண்டு ஸ்கோச் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.காவல் துறை நண்பர்கள் இயக்கம் கடந்த 1993ம் ஆண்டு ஐபிஎஸ் பிரதீப் வி.பிலிப் அவரால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த 1994ம் ஆண்டு தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த இயக்கம் இன்று தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரங்களை பெற்றுள்ளது. அதேபோல், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் குற்றவாளியை தெரிந்து கொள்ளுங்கள் என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. இதனால் 80 சதவிதம் அரிசி கடத்தல் குற்றவாளிகளை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்கிறது. இந்த இரண்டு திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கையை டெல்லியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த இரண்டு திட்டங்களும் ஸ்கோச் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி டெல்லியில் நடக்கும் ஸ்கோச் உச்சி மாநாட்டில் டிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு இந்த இரண்டு விருதுகள் வழங்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்