கூட்டணியில் இருந்து கொண்டே தமிழக அரசை விமர்சிப்பதா?: பாமக மீது அதிமுகவினர் அதிருப்தி
2019-11-20@ 00:34:35

சென்னை: கூட்டணியில் இருந்து கொண்டே தமிழக அரசை விமர்சிப்பதா என்று பாமக மீது அதிமுக தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜ, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. கூட்டணிக்கு முன்னர் அதிமுகவை கடுமையாக பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர் விமர்சித்து வந்தனர். கூட்டணிக்கு பிறகு அதிமுக அரசை விமர்சிப்பதை பாமகவினர் தவிர்த்து வந்தனர். அறிக்கை வெளியிட்டால் கூட அதிமுக அரசின் செயல்களை விமர்சிப்பதை தவிர்த்து வந்தனர்.ஆனால், தற்போது அதிமுக அரசை பாமக விமர்சித்து வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்ட தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதே நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படும் என்றும் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் பேட்டியின் போது கூறி வருகின்றனர். தேர்தலை நடத்துவதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் வகையில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வாங்கி முடிக்கப்பட்டுள்ளது.இந்த மனுக்கள் மீதான பரிசீலனை விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளது. அதாவது, புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களை காரணம் காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்த கூடாது என்ற கருத்தை தெரிவித்துள்ளது. குறிப்பாக இதுதொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உள்ளாட்சி தாமதப்படும் முயற்சி ஆபத்தானவை என்று கூறி உள்ளார். அதிமுக அரசு தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்தை காட்டி உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிமுகவிலேயே விரைவாக தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் கூறி வருகிறார்கள். அப்படியிருக்கும் போது 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சி ஆபத்தானது என்ற ராமதாஸின் அறிக்கை தேவையில்லாததது. இதுபோன்ற அறிக்கை வெளியிடுவது கூட்டணி தர்மத்தை மீறிய செயல் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல, பாஜ தலைவர்களும் இதுபோன்று அதிமுக அரசை விமர்சித்து வருகின்றனர். அவர்களும் அதிமுக அரசை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறுங்கள் என்று அதிமுக உண்மை விசுவாசிகள் ஆவேசமாக கூறியுள்ளனர். 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் முயற்சி ஆபத்தானது என்ற ராமதாஸின் அறிக்கை தேவையில்லாததது.
மேலும் செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 14 மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : திமுக தலைமை தகவல்
எத்தனை கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும் அதிமுக அடையப்போவது தோல்வி தான்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 5வது நாளாக 1,025 பேர் வேட்புமனு தாக்கல்
ஒன்றிய கவுன்சிலர் பதவி 14 லட்சத்துக்கு ஏலம் எடுத்த அதிமுக எம்எல்ஏ கணவர்
சென்னை மாநகராட்சியில் எம்-சாண்ட் பயன்படுத்தியதன் மூலம் 1,000 கோடி ஊழல் குறித்து விசாரித்து அமைச்சர் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
உள்ளாட்சி தேர்தல் 7 மாவட்டத்திற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது