நாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு
2019-11-19@ 17:43:19

டெல்லி: நாடாளுமன்றத்தில் 26ம் தேதி நடைபெற உள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்ட 70ம் ஆண்டு நிறைவு நாள் விழாவில் இந்திய அரசியல் நிர்ணயசபை உறுப்பினர் டி.எம். காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வேண்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் எம்.பிக்கள் ஏகேபி சின்ராஜ் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த காளியண்ண கவுண்டர் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், முதல் இடைக்கால நாடாளுமன்ற உறுப்பினர், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினர், 6 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினர், சட்ட மேலவை எதிர்க்கட்சி துணை தலைவர், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட ஜில்லா போர்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்து சேவையாற்றி உள்ளார்.
மேலும் காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து நாட்டுக்காக பணியில் ஈடுபட்டவர் டி.எம். காளியண்ண கவுண்டர் எனவும் எம்.பிக்கள் கூறுகின்றனர். காளியண்ண கவுண்டரின் 100வது பிறந்தநாள் ஜனவரி 10ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடுவுடம் எம்.பிக்கள் ஏகேபி சின்ராஜ், கணேசமூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் நாடாளுமன்றத்தில் 26ம் தேதி நடைபெறவுள்ள இந்திய அரசியல் அமைப்பு சட்ட 70ம் ஆண்டு நிறைவு நாள் விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வேண்டும் என வெங்கய்யா நாயுடுவிடம் எம்.பிக்கள் இருவரும் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
இந்திய பொருளாதாரம் ஐசியூ நோக்கி செல்கிறது : மோடி அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்தால் அதிர்ச்சி
சர்வதேச அளவில் நடைபெற்ற சோதனையில் ரூ.1,300 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது
வடகிழக்கு மாநிலங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளை நம்ப வேண்டாம்: இந்திய ராணுவம் அறிவுறுத்தல்
தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலை திரும்புகிறது: கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு!
நான் கேட்க மாட்டேன் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்...ராகுல் காந்தி ஆவேசம்
வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை எதிரொலி: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: பாஜ.வின் பதில் கோஷத்தால் பரபரப்பு
14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்
கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்
நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது