SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது

2019-11-19@ 17:25:15

கோவை: கோவையில் ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கோவை கணியூரில் உள்ள தனியார் பஞ்சாலையில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராய்மோன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராய்மோன் இளம் பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறி கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்றார். அங்கு வைத்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி இளம் பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற ராய்மோகனை தேடி வந்தனர். சம்பவத்தன்று கேரளாவில் இருந்து கோவைக்கு ரெயிலில் வந்த ராய்மோனையும், அவருடன் இருந்த இளம் பெண்ணையும் மீட்டனர். பின்னர் 2 பேரையும் போலீசில் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஆசைவார்த்தை கூறி 17 வயது இளம்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை கடத்தி சென்ற ராய்மோன் மீது கருமத்தம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ராய்மோனை நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

  • victoriafallsdry2019

    தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்