SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை கண்டுபிடித்தது நாசா

2019-11-19@ 16:53:12

நாசா சமீபத்தில் வெளிப்புற விண்வெளியில் இருந்து ஒரு மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பை (தெர்மோநியூக்ளியர் ) கண்டறிந்ததுள்ளது. இதற்கு காரணம் ஒரு தொலைதூர விண்வெளி நட்சத்திரம் என்று தெரிவித்துள்ள விண்வெளி நிறுவனத்தின் அறிக்கை, இது சூப்பர்நோவாவில் வெடித்த ஒரு நட்சத்திரத்தின் நட்சத்திர எச்சங்கள் எனவும், ஆனால் இது கருந்துளை உருவாவதற்கு தேவையானதை விட மிகவும் சிறியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. நாசா இந்த வெடிப்பைக் கண்டறிந்தது எப்படியெனில், அது அனுப்பிய சக்திவாய்ந்த எக்ஸ்-கதிர்களை, இந்த ஏஜென்சியின் சுற்றுப்பாதை ஆய்வு விண்கலமான NICER கண்டறிந்தது.   

ஒட்டுமொத்தத்தில் இது ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. விண்வெளி மிகவும் ஆபத்தான மற்றும் மிகவும் உலோக இடம் ஆகும்.  கடந்த ஆகஸ்ட் மாத வெடிப்பின் போது 20 வினாடிகளில் வெளியிடப்பட்ட அதே அளவுள்ள ஆற்றலை, நமது சூரியன் வெளியிட 10 நாட்கள் தேவைப்படும் என்று கடந்த மாதம் தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் ஆய்வுக்கட்டுரையில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பு மிக பிரம்மாண்டமாதாக இருந்தது என்று ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய நாசா வானியற்பியல் நிபுணர் பீட்டர் புல்ட் நாசாவின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஒளி பிரகாசத்தில் இரண்டு-படி மாற்றத்தை நாங்கள் காண்கிறோம். இது நடசத்திர மேற்பரப்பில் இருந்து தனித்தனி அடுக்குகளை வெளியேற்றுவதால் நடைபெற்றது. இந்த சக்திவாய்ந்த நிகழ்வுகளின் இயற்பியலை புரிந்துகொள்ள அதன் பிற அம்சங்கள் உதவுகின்ற என்று நாங்கள் கருதுகிறோம். என்கிறார்.   நட்சத்திரத்தின் மேற்பரப்பிற்கு அடியில் மூழ்கி கார்பன் அணுக்களுடன் இணைந்த ஹீலியத்தால் தெர்மோனியூக்ளியர் வெடிப்பு ஏற்பட்டதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பின்னர் ஹீலியம் வெடிக்கும் விதமாக வெடித்து முழு நட்சத்திர மேற்பரப்பு முழுவதும் தெர்மோநியூக்ளியர் நெருப்புபந்தை கட்டவிழ்த்துவிட்டிருக்கலாம் என்று NICER தலைவர் ஜாவன் அர்சோமனியன் விளக்கினார். '


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • deepam-5

  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

 • 06-12-2019

  06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • cambodiyaa_insects1

  கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

 • saxophomne_chinaaa

  40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

 • jayalalitha_admk11

  இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்