நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்மார்ட் வாட்சுகள் இந்தியாவில் அறிமுகம் : விலை ரூ.5,499 மட்டுமே
2019-11-19@ 16:09:49

நாய்ஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய நிறுவனமான நாய்ஸ் நிறுவனம் தற்பொழுது நம்பமுடியாத மலிவான விலையில் ஸ்மார்ட் வாட்ச்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் நாய்ஸ் கலர் பிட் ப்ரோ 2 என்ற ஸ்மார்ட் ஃபிட் பேண்டை நாய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஆகிய இரண்டு மாடல்களை, நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது.
மலிவான விலையில் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ள இந்த நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் இரண்டு மாடல்கள் பற்றிய தகவல்கள் என்னவென்று பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நிச்சயம் உங்கள் பாக்கெட் மனிக்கு கூடுதல் செலவு வைக்காது என்று நாய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஆகிய இரண்டு மாடல்களும் ரூ.5,499 என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாடல்களும் gonoise.com என்ற நிறுவனத்தின் வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும். அதனைத் தொடர்ந்து அனைத்து ரீடைலர் இடங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாய்ஸ் ஃபிட் எவால்வ் சிலேட்டு பிளாக், டஸ்க் ப்ளூ மற்றும் ப்ளஷ் பிங்க் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகிவுள்ளது. அதேபோல் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் மாடல் கருப்பு நிறத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ரூ. 41,999 விலையில் நோக்கியா ஸ்மார்ட் டிவி !!
இந்தியாவில் அறிமுகமாகியது ஹுவாய் வாட்ச் GT 2
இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட்5 அறிமுகம்
ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் கொண்ட 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நோக்கியா!
மலிவு விலையில் அட்டகாசமான அம்சங்களை கொண்ட ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுகம்!
நீண்ட நேர பேட்டரி திறன் கொண்ட புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்: இந்தியாவில் அறிமுகம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி