SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 6 மாதங்களில் 34 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்துள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்!

2019-11-19@ 15:28:14

புதுடெல்லி: கடந்த 6 மாதங்களில் 34 லட்சம் சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்துள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா கட்சி, கடந்த மே மாத இறுதியில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. புதிய ஆட்சியில் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடரின் இறுதியில், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலங்களை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்தது. இந்த நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. குளிர்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஷ்மீர் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அப்போது மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி, காஷ்மீர் விவகாரம் குறித்த எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்தார். அந்த பதிலில், கடந்த 6 மாதங்களில் மட்டும் 12,934 வெளிநாட்டினர் உள்பட 34 லட்சத்து 10 ஆயிரத்து 219 சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீருக்கு வந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தின் தரவு படி இந்த காலக்கட்டத்தில் சுற்றுலாத்துறை மூலம் ரூ.25 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு அண்மையில் எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்பு சட்டம் 370 பிரிவை நிக்கிய பின்பு, கல்வீச்சு சம்பவங்களும் குறைந்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்டு 5ம் தேதி முதல் நவம்பர் 15ம் தேதி வரை 190 கல்வீச்சு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 765 கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவங்களை தடுக்க அரசாங்கம் சார்பில் பலதரப்பட்ட கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2019

    14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • po13

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

  • wagle_hunttt

    கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

  • modi13

    நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

  • 3dhmes_111

    3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்