ஏறுமுகத்தில் தங்க விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.29,264-க்கு விற்பனை
2019-11-19@ 11:42:19

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 ரூபாய் உயர்ந்து ரூ.29,264-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராம் ரூ.3,658-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து 29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது.
ஏறுமுகத்தில் தங்க விலை:
சென்னையில் இன்று (நவம்பர் 19) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) கிராம் ரூ.3,658-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 29,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 29,264 ரூபாயாக விற்பனையாகிறது. இன்று சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 4 காசுகள் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.77 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,765 ஆகவும் இருக்கிறது.
மேலும் செய்திகள்
ஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்
என்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்
பொருளாதார வளர்ச்சிக்கு கூடுதல் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகின்றது: நிர்மலா சீதாராமன் பேட்டி
ஆட்டோமொபைல் துறையில் 1 லட்சம் பேருக்கு வேலை காலி : உதிரிபாக உற்பத்தியாளர்கள் கவலை
மத்திய அரசு உதவாவிட்டால் வோடபோன் நிறுவனத்தை மூடுவதுதான் ஒரே வழி : பிர்லா வேதனை
இறங்குமுகத்தில் தங்கத்தின் விலை.. சவரன் ரூ.24 குறைந்து ரூ. 29,128க்கு விற்பனை
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்