யு-17 உலக கோப்பை கால்பந்து: 4வது முறையாக பிரேசில் சாம்பியன்
2019-11-19@ 00:22:48

ரியோ டி ஜெனிரோ: பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் மெக்சிகோவை வீழ்த்திய பிரேசில் அணி 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.பிரேசிலில் நடைபெற்ற இந்த தொடரில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஈகுவடார், கொரியா உட்பட 24 நாடுகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரை இறுதியில் நெதர்லாந்து - மெக்சிகோ 1-1 என டிரா செய்ததை தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் மெக்சிகோ 4-3 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.பெசாரோ நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பைனலில் பிரேசில் - மெக்சிகோ அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்த ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் புகா கடத்தி தந்த பந்தை கோன்சாலெஸ் வலைக்குள் திணித்து பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இதைத் தொடர்ந்து பதில் தாக்குத்தலை தீவிரப்படுத்திய பிரேசில் அணிக்கு 84வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்க, கயோ ஜார்ஜ் கோல் அடித்து 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இந்த பெனால்டி வாய்ப்பை வீடியோ ரிவியூ மூலம் பிரேசில் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நேர முடிவு வரை சமநிலையே நீடித்தது. காயம் உள்ளிட்ட காரணங்களுக்காக 7 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அதில் மாற்று வீரராகக் களமிறங்கிய லாஸரோ கோல் அடிக்க (90’+3’) பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் 4வது முறையாக யு-17 உலக கோப்பையை வென்றது.முன்னதாக நடைபெற்ற 3வது, 4வது இடத்துக்கான போட்டியில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
மேலும் செய்திகள்
இங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்
திருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
சென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்
‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்
டேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்
இந்திய அணியின் 2021 ஆஸி. டூரில் 2 பகல்/இரவு டெஸ்ட்?
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்