ஏடிபி டூர் பைனல்ஸ் 21 வயது இளம் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
2019-11-19@ 00:22:18

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.லண்டன் ஓ2 அரங்கில் நடைபெற்ற பரபரப்பான பைனலில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (21 வயது, 6வது ரேங்க்), ஆஸ்திரேலியாவின் டொமினிக் தீமுடன் (26 வயது, 5வது ரேங்க்) மோதினார். டை பிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டில் டொமினிக் தீம் 7-6 (8-6) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த சிட்சிபாஸ் 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால், இந்த செட் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் அபாரமாக விளையாடிய சிட்சிபாஸ் 6-7 (6-8), 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 2 மணி, 35 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக ஏடிபி உலக டூர் பைனல்ஸ் கோப்பையை முத்தமிட்டார்.
ஆஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட் தனது 20வது வயதில் 2001ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஏடிபி டூர் பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். அதன் பிறகு இந்த கோப்பையை வென்ற மிக இளம் வயது வீரர் என்ற பெருமை சிட்சிபாசுக்கு (21 வயது, 3 மாதம்) கிடைத்துள்ளது. மேலும், ஏடிபி டூர் பைனல்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கிரீஸ் வீரர் என்ற சாதனையையும் அவர் வசப்படுத்தி உள்ளார். முன்னணி வீரர்கள் பெடரர், நடால்,ஜோகோவிச் பங்கேற்ற தொடரில் சிட்சிபாஸ் பட்டம் வென்றுள்ளது அடுத்த ஆண்டு டென்னிஸ் சீசனில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏடிபி உலக டூர் பைனல்ஸ் தொடரில் தொடர்ந்து 4வது ஆண்டாக முதல் முறை சாம்பியன்கள் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 2016ல் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே, 2017ல் கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), கடந்த ஆண்டு ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் ஆகியோர் பட்டம் வென்றிருந்த நிலையில், தற்போது சிட்சிபாஸ் புதிய சாம்பியனாக முத்திரை பதித்துள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் பிரான்சின் பியரி ஹியூஸ் ஹெர்பர்ட் - நிகோலஸ் மகுத் ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் தென் ஆப்ரிக்காவின் ரேவன் கிளாஸன் - மைக்கேல் வீனஸ் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மேலும் செய்திகள்
இங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்
திருவனந்தபுரத்தில் இன்று 2வது டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: பதிலடி கொடுக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
சென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்
‘சேப்டி நூன்சாக்கு’ பதக்கங்களை அள்ளிய தமிழகம்
டேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்
இந்திய அணியின் 2021 ஆஸி. டூரில் 2 பகல்/இரவு டெஸ்ட்?
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்