இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு: நவ.1 முதல் 15 வரை 19,0000 கோடி அளவிற்கு முதலீடு
2019-11-18@ 14:11:14

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் பல்வேறு வகையான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துவருகிறார்கள். இதில் சில்லறை முதலீட்டாளர்கள், இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் என இருந்தாலும், இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்வது என்னவோ அந்நிய நேரடி முதலீட்டாளர்களும், அந்நிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் தான். இந்தியப் பங்குச் சந்தைகளை தாங்கிப் பிடிப்பதும், அதள பாதாளத்தில் விழ வைப்பதும் பெரும்பாலும் அந்நிய முதலீட்டாளர்கள் தான்.
இதற்கிடையே, கடந்த 2018-19-ம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலும் தள்ளியே இருந்து அந்நிய முதலீட்டாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காலங்களில் கூட அதிக அளவில் முதலீடு செய்து வந்தனர். இதன் காரணமாகவே இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டு சாதனை படைத்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் கடந்த ஜூன் மாதம் முழுவதும் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டாததால் சந்தை தொடர்ந்து பாதாளத்திலேயே வர்த்தகம் நடைபெற்றது.
இருப்பினும், கடந்த ஜூலை மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 3 ஆயிரத்து 710.21 கோடி ரூபாய் வரையிலும் விற்று விட்டு இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வெளியேறிவிட்டனர். அதற்கு மாறாக இந்திய கடன் சந்தையில் சுமார் 3 ஆயிரத்து 234.65 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்திருந்தனர். மொத்தத்மாக சுமார் 475.56 கோடி ரூபாய் கூடுதலாக விற்று விட்டு வெளியேறி இருந்தனர்.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் நவம்பர் மாதத்தில் 19,0000 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகள் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான நாட்களில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.19,203 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக பங்குச் சந்தைகளில் 14,435 கோடி ரூபாயும், கடன் பத்திரங்களில் 4,867 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடு வந்துள்ளது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்
எவ்வளவு சேமித்தாலும் வங்கி திவாலானால் 1 லட்சம் தான் கிடைக்கும்
5 சதவீதமாக குறைப்பு பொருளாதார வளர்ச்சி ரிசர்வ் வங்கி அதிர்ச்சி: கடன் வட்டி மாற்றமில்லை
வாகன உற்பத்தியை குறைக்க 12 நாள் வரை விடுமுறை அசோக் லேலண்ட் அறிவிப்பு
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆனார் சுந்தர்பிச்சை: லாரி பேஜ், செர்கே பிரின் திடீர் விலகல்
வருவாய் குறைவதால் முடிவு ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து சவரன் ரூ.29,350-க்கும் விற்பனை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி