SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏர்பேக் காரில் செய்யக்கூடாதவை!

2019-11-17@ 00:54:20

 இன்றைய காலக்கட்டத்தில், சில கார்கள் விபத்தில் சிக்கும்போது, ஏர்பேக் விரிவடையாதது குறித்து சர்ச்சை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. கார் ஓட்டுனர்கள் அறியாமல் செய்யும் சிறிய விஷயங்களால் உயிர் காக்கும் காற்றுப்பைகள்  விரிவடையாமல் போகும் துயரமான சம்பவங்கள் நடந்து வருகிறது. கார் வாங்கும்போது, விற்பனை பிரதிநிதிகள் இந்த விஷயத்தை கூறி இருப்பார்கள். சில ஷோரூம்களில் சொல்ல மறந்திருக்கலாம். ஆனால், சிறிய விஷயங்களை மறந்தால்,  ஏர்பேக் பிரயோஜனம் இல்லாமல் போகும் வாய்ப்புள்ளது. எனவே, ஏர்பேக் கார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக சில டிப்ஸ்களை பின்பற்ற வேண்டும். அதன் விவரம்:

1. இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் என்பது அடிப்படை பாதுகாப்பு அம்சமாக கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. மேலும், பல பட்ஜெட் கார்களில்கூட விருப்பத்தின்பேரில் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக் மற்றும் சைடு  ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இந்த கார்களில் சில சிறிய தவறு செய்தால்கூட ஏர்பேக் விரிவடையாது. மேலும், அதுவே சில ஆபத்தையும் விளைவித்துவிடும்.

2. சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்தால் ஏர்பேக் விரிவடையாது. குறுகிய தூர பயணம்தானே என கருதி பலர் சீட் பெல்ட் அணிவதில்லை. விபத்து எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே, காரில் ஏறியவுடன் கண்டிப்பாக சீட்  பெல்ட் அணிந்துவிட்டு, காரை இயக்குவதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

3. காரில் சீட் கவர் போடுவதால் ஏர்பேக் விரிவடையாது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, ஏர்பேக் உள்ள கார்களில் சீட் கவர் போடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, வெளிச்சந்தையில் சீட் கவர் வாங்கி போடக்கூடாது.  சீட் கவர் போடுவதால், முன்புற ஏர்பேக்குகள் மட்டுமின்றி, சைடு ஏர்பேக்குகளும் விரிவடையாது.

4. காரின் ஸ்டீயரிங் வீலுக்கு மிக நெருக்கமாக அமர்ந்து செல்வதை தவிர்க்கவும். அதாவது, சீட் பெல்ட் கண் இமைக்கும் நேரத்தில் விரிவடையும்போது முகத்தில் அறைந்து காயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஸ்டீயரிங் வீலில் இருந்து  குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து ஓட்டுவது அவசியம். கார் வாங்கும்போதே டீலர்ஷிப் விற்பனை அதிகாரியிடம் இது குறித்து விளக்கம் கேட்டுக்கொள்வது நல்லது.

5. ஓட்டுனருக்கு பக்கத்தில் அமர்ந்து வரும் சிலர் டேஷ்போர்டு மீது கால் வைத்து பயணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுவும் ஆபத்தில் முடிந்துவிடும். விபத்தின்போது ஏர்பேக் விரிவடைந்தால் மிக மோசமான காயங்களை  ஏற்படுத்திவிடும்.

6. ஏர்பேக் உள்ள கார்களில் டேஷ்போர்டின் மீது பொம்மைகள் மற்றும் இதர பொருட்களை வைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சக பயணிக்கான இருக்கை பக்கத்தில் உள்ள ஏர்பேக் விரிவடையும்போது மிக மோசமான  விபத்துக்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

7. காரின் முன்புறத்தில் ‘’புல் பார்’’ எனப்படும் எக்ஸ்ட்ரா பம்பரை பொருத்துவதும் ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கு வழிவகுக்கும். காரின் முன்புறத்தில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்பட்டு இருக்கும் சென்சார்களை வைத்துத்தான்  மோதலின்போது ஏர்பேக் விரிவடையும். இதுபோன்ற ’புல் பார்’ பொருத்தினால் சென்சார்களுக்கு மோதல் தாக்கம் போதிய அளவு கிடைக்காமல், ஏர்பேக் விரிவடையாமல் போவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

8. தற்போது பெரும்பாலான கார்கள் ஏர்பேக்குடன்தான் வருகிறது. எனவே, ஏர்பேக் இருக்கும் கார்களில், வெளிச்சந்தையில் இருந்து ஆக்சஸெரீகளை வாங்கி பொருத்துவதை தவிர்க்கவும். பொதுவாக, எந்த கூடுதல் ஆக்சஸெரீகளையும்  பொருத்தாமல் இருப்பது நல்லது. மேற்கண்ட டிப்ஸ்களை பயன்படுத்தி, சரியான முறையில் அமர்ந்து, கார் ஓட்டுவது மிகுந்த பலன் தரும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 10-12-2019

  10-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hongkiong_1211

  அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் 6 மாத கால நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பிரம்மாண்ட பேரணி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 • northesat_masothaa1

  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களால் போர்க்களமாகி உள்ள வடகிழக்கு மாநிலங்கள்

 • dragon_shapes_chinaa1

  40 மீட்டர் நீள டிராகன், பாண்டா.. சீன புத்தாண்டை முன்னிட்டு எஸ்டோனிய தலைநகரை அலங்கரித்த ஒளிரும் உருவங்கள்

 • puthucheri_cmnarayana

  சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் பெண்களுக்கு பரிசாக வெங்காயத்தை வழங்கினார் புதுச்சேரி முதல்வர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்