SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல்

2019-11-17@ 00:52:37

கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த கார், மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  ஆட்டோமேட்டிக் மாடல் வருகையை வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பு மிக விரைவில் நிறைவேறும் என தெரிகிறது. அதாவது, டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல், அடுத்த ஆண்டு  பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

பியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்  இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் கார் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது.

இந்த கார், லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி-8 பிளாட்பார்மின் அடிப்படையிலான ஒமேகா ஆர்க் பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் வடிவமைக்கப்படும் முதல் கார் மாடல்  என்பதுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது. மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிடை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலின் விலை ₹1 லட்சம் வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது. இதன் 7 சீட்டர் மாடலானது  ஹசினி என்ற பெயரில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்