அடுத்தாண்டு நவம்பரில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டம்
2019-11-15@ 00:47:08

புதுடெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்தாண்டு நவம்பருக்குள் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் முழு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அடுத்தாண்டு நவம்பரில் சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பல குழுக்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. இவற்றில் 3 துணைக் குழுக்கள் கடந்த அக்டோபரில் இருந்து 4 உயர்நிலை கூட்டம் நடத்தியுள்ளது.
இம்முறை நிலவில் தரையிறக்குவதற்கான இடம், நேவிகேஷன் போன்ற அம்சங்களை இஸ்ரோ கவனமாக ஆராய்ந்து வருகிறது. கடந்த முறை அதிவேகத்தில் லேண்டர் தரையிறக்கும்போது அதன் கால்கள் உடைந்திருக்கலாம் என கருதப்படுகிறது. அதனால், இந்த முறை அனுப்பப்டும் லேண்டரில் வலுவான கால்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திராயான்-3 விண்கலத்தில் ஆர்பிட்டர் இல்லாமல் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 32 பேர் உயிரிழப்பு...தீயை அணைக்க 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
'மக்களுக்கு அடுத்த பேரிடி' ஜிஎஸ்டி மீண்டும் கடுமையாக உயர்கிறது: பல்வேறு பொருட்களின் விலை அதிகரிக்கும் 1 லட்சம் கோடி கூடுதலாக வசூலிக்க அதிரடி
ஜார்க்கண்ட் 2ம் கட்ட தேர்தலில் 63 சதவீதம் வாக்குப்பதிவு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது: பகல் 12 மணிக்குள் முடிவு தெரியும்
கொடி நாளுக்கு தாராளமாக நிதி வழங்க பிரதமர் கோரிக்கை
ஐதராபாத் என்கவுன்டர் விவகாரம்: நீதி வழங்குவது ஒருபோதும் உடனடியாக இருக்க கூடாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!
ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்