SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு மீது நடவடிக்கை வேண்டும்

2019-11-14@ 00:15:31

சென்னை: சென்னையில் தற்போது நிலவி வரும் அதிகப்படியான காற்று மாசுவை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று புதிய வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. சென்னையில் நிலவும் மோசமான காற்று மாசு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், காற்று மாசு கட்டுப்படுத்த தவறிய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ மற்றும் போக்குவரத்து ஆணையம் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். டெல்லி காற்று மாசு தொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை தமிழகத்திலும் உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

  • victoriafallsdry2019

    தென் ஆப்ரிக்காவில் நிலவும் வறட்சி: விக்டோரியா அருவியில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்த தண்ணீர் வரத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்