SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொ.ப.செ. ஆக மாறிப் போயிருக்கும் தலைமை அதிகாரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-11-14@ 00:12:55

‘‘தலைமை அதிகாரி பேச்சு வில்லங்கமாக இருக்காமே..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
 ‘‘ஆளும் கட்சி மீட்டிங், அரசு விழாக்களில் பேசும் அமைச்சர், எம்எல்ஏக்கள் தான், தங்களது கட்சி சாதனைகளை முழக்கமிட்டு பேசுவாங்க. ஆனா, அரசின் தலைமை அதிகாரி ஒருவர் சமீபத்துல அதுமாதிரி பேசுனது, விவாதத்திற்குள்ளாகியிருக்கு. சமீபத்துல தமிழக விவிஐபி மற்றும் தன்னோட சொந்த ஊருல நடந்த அரசு விழாவுல கலந்துகிட்ட தலைமை அதிகாரி, ஆளும்கட்சியோட புகழ்பாடி தள்ளிட்டாராம்.
குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில் திட்டங்களுக்கு ஒதுக்குன நிதின்னு ஒரு புள்ளி விவரத்த தெரிவிச்சதோட இல்லாம, இதுமாதிரி ஒரு தலைமை பண்பு யாருகிட்டயும் இல்லைனு சொல்ற அளவுக்கு பேசுனாராம். இந்த பேச்சு, கடந்த 2 நாளா சோஷியல் மீடியால வேகமா பரவிட்டு இருக்கு.
பொதுவாவே அதிகாரிங்கனா, அரசின் திட்டங்களை பத்தி பேசுவாங்களே தவிர, தனிப்பட்ட முறையில் பெருசா துதிபாட மாட்டாங்க. ஆனா தலைமை அதிகாரியின் அந்த பேச்சு அதையும் தாண்டி இருந்துச்சாம். இதனால் அரசு அதிகாரியா, இல்ல ஆளும் கட்சியின் கொபசெவா-னு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்காங்க. அதேபோல், ஐஏஎஸ் அதிகாரிகளும் அதிர்ச்சியில உறைஞ்சு போயிருக்காங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நேரத்துல தேனி மாவட்டத்துல, மீண்டும் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பஞ்சாயத்தை கிளப்பிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில், இப்போதே உள்ளாட்சி தேர்தல்ல யாரை நிப்பாட்டுறதுன்னு பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கு. இங்கே இருக்கிற 4 எம்எல்ஏ தொகுதிகள்ல, 2 தொகுதி இப்ப திமுக பக்கம் வந்திருக்கு... அதனால இந்த முறை உள்ளாட்சி தேர்தல்ல, தகுதியான ஆளை நிப்பாட்டணும்னு எடப்பாடி நினைக்கிறாராம்... தேனி மாவட்டத்துல உள்ள கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன். இவரது மகன் பாலா. 2 பேரும் முதல்வர் எடப்பாடியோட தீவிர ஆதரவாளர்கள்... எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவுவிழாவுல, முதல்வரை வாழ்த்தி பாலா வச்ச பேனரால, ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்புக்குள்ள நடந்த பேஸ்புக் யுத்தத்தை கடைசியில் முதல்வரே முடிச்சு வச்சாருங்கிறது தனிக்கதை.
 உள்ளாட்சித்தேர்தல்ல தர்மயுத்தத்தில கலந்து கொண்டவங்களுக்கும், டிடிவி அணியிலிருந்து அதிமுகவுக்கு வந்தவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப் போறதா கட்சி வட்டாரத்துல பேச்சு அடிபடுது... இதனால அதிருப்தி அடைந்த இபிஎஸ் ஆதரவாளர்கள், உள்ளாட்சி தேர்தல்ல நமக்கு வேண்டியவங்களைத்தான் நிப்பாட்டணும்ணு சொல்றாங்களாம்... அதனால எம்எல்ஏ ஜக்கையன் மகன் பாலாவை கம்பம் நகராட்சி தலைவர் பதவிக்கு நிப்பாட்டணும்னு சொல்றாங்க. ஆனா, இதுல ஓபிஎஸ் தரப்புக்கு திருப்தி இல்லையாம்... இந்த பதவிக்கு ஜெயலலிதாவால் கட்சிப்பதவி பறிக்கப்பட்ட ஒருத்தரும், டிடிவி அணிக்குச்சென்று திரும்ப வந்த ஒருத்தரும் ட்ரை பண்றாங்களாம்... இவங்களுக்கு ஓபிஎஸ் தரப்பு சம்மதம் சொன்னாலும் இவங்களுக்கு தரக்கூடாதுன்னு தேனி மாவட்ட இபிஎஸ் குரூப் கடுமையாக எதிர்க்குறாங்களம்... எம்பி சீட்தான் கையை விட்டுப்போச்சு... அதனால இந்த முறை மகனுக்கு நகராட்சி தலைவர் பதவியை வாங்கிக் கொடுத்திடனும்னு, கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் பிடிவாதமா இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வேறென்ன விவகாரம் இருக்கு..’’
 ‘‘தமிழகத்தில் ஜெயலலிதா உடல் நலம் குன்றியிருந்தபோது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனு மற்றும் அதற்கான கட்டணமும் பெறப்பட்டது. இந்நிலையில், வார்டுகள் சீரமைப்பு மற்றும் ஒதுக்கீடு உள்ளிட்ட சில முரண்பாடுகளை களைந்து விட்டு தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இதற்கிடையே ஜெயலலிதா மறைந்து விட, அதன்பின்னர், நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், எச்சரிக்கை செய்தும் தமிழக அரசின் அழுத்தம் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தள்ளிப் ேபாட்டு வந்தது.
தற்போது நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றி காரணமாகவும், நீதிமன்ற நெருக்கடி காரணமாக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.
இதனால், ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலுக்கு கட்டிய பணத்தை இதுவரை கட்சி தலைமை திரும்ப தரவில்லை. தற்போது மீண்டும் அதிமுக தலைமை பணம் கட்ட கூறியுள்ளது கவுன்சில் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியை பொறுத்தவரை கூட்டணி கட்சியான பா.ஜனதா அதிக வார்டுகளை எதிர்பார்க்கும். இதர கட்சிகளில் தேமுதிகவும் வார்டை கோரும்நிலை உள்ளது. இதனால், 2வது முறையாக பணம் கட்டி, அந்த வார்டு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டால், பணம் திரும்பவும் கிடைக்காது. பணம் கட்டாமல் இருந்தால், வார்டு தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைக்காது என குழப்பத்தில் புலம்பி வருகின்றனர்.
இதுவரை அதிமுகவினருக்கு எதிராக செயல்பட்டவர்கள் சிலரும் நாகர்கோவில் மாநகராட்சியில் அதிமுகவில் கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை குறிவைத்து இணைந்து வருவதும், ஏற்கனவே கட்சி மாறாமல் கட்சிக்காக உழைத்த முன்னாள் கவுன்சிலர்களிடம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்