SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவம்பர் 22ம் தேதி புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய விவோ நிறுவனம் திட்டம்

2019-11-13@ 16:53:00

விவோ நிறுவனம் வரும் நவம்பர் 22-ம் தேதி தனது புதிய விவோ U20 மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது அருமையான டிஸ்பிளே அம்சம் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அம்சங்கள் விவோ U20 ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவோ U20 ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும் என்றும் கண்டிப்பாக ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். விவோ U20 ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு கைரேகை சென்சார், பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் வெனிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam-5

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

  • 06-12-2019

    06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • cambodiyaa_insects1

    கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

  • saxophomne_chinaaa

    40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

  • jayalalitha_admk11

    இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்