SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Zebronics அறிமுகப்படுத்துகிறது 11மணிநேர பேட்டரி லைஃப்கொண்ட, Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்

2019-11-13@ 15:24:24

இந்தியாவின் முன்னணி IT மற்றும் கேமிங் உபகரணங்கள், சவுண்ட் சொல்யூஷன்கள், மொபைல்/ லைஃப்ஸ்டைல் ஆக்ஸசரீஸ் மற்றும் சர்வைலன்ஸ் தயாரிப்புகளின் பிராண்டான Zebronics அறிமுகப்படுத்துகிறது, பற்பல அம்சங்கள் நிறைந்த, சிறந்த சவுண்ட்ரீப்பிரொடக்ஷன் தரக்கூடிய, 11 மணி நேர ப்ளேபேக்குடன் மெலிதாக வடிவமைக்கப்பட்ட ‘Zeb-Soul’.

இந்த இயர்ஃபோன்கள், உங்களது கேட்டலை சிக்கலற்றதாக மாற்றும் விதமாக, ஒரு நெக்பேண்ட் வடிவமைப்பில் காந்த சக்தியுடைய இயர்பீசஸ் கொண்ட இன்-இயர் வகை இயர்ஃபோன்களுடன் கிடைக்கிறது. ஸ்டைலான தோற்றத்தில் உயர்ந்த தரத்திலான பிரீமியம் மாட் ஃபினிஷில், இந்த இயர்ஃபோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயர்ஃபோனுடன் உங்களுக்குக் கிடைக்கும் 10 மிமீ டிரைவருடன் உங்களை சவுண்டின் இயக்கத்தில் மூழ்கிடுங்கள். சிறப்பான சவுண்ட் ரீப்பிரொடக்ஷனிற்காக,மேம்படுத்தப்பட்ட சிப்செட் மற்றும் AAC கோடெக் ஆகியவற்றையும் பெற்றுள்ளது. இசைவிரும்பிகளுக்கு ஒரு நற்செய்தியாக 11.5 மணிநேர நீடித்த ப்ளேபேக் நேரத்துடன் இந்த வயர்லெஸ் இயர்ஃபோன் வருகிறது.

இந்த இயர்ஃபோன் ஆண்டிராய்டு/ iOS சாதனங்கள் ஆதரிக்கும் வாயிஸ் அசிஸ்டெண்ட் ஆதரவுடன் வருவதால் உங்கள் ஆர்வத்தைத் துரத்தி, கேள்விகள் கேட்டு, உடனடி பதில்களையும் பெற்றிடுங்கள். பொத்தானை அழுத்துவதன் மூலம், Zeb-Soul வயர்லெஸ் இயர்ஃபோனில் வாயிஸ் அசிஸ்டெண்ட்டை இயக்க முடியும்.

சத்த அளவு மற்றும் மீடியா கட்டுப்பாடுகளுக்கான பொத்தான்கள் போன்ற இதன்நிறைவான அம்சங்களே, இதனைச்செல்லும் வழியெங்கும் இசையைக் கேட்பவர்களுக்குச் சிறந்த தேர்வாக மாற்றுகிறது. டியூவல் பேரிங் மற்றும் ஸ்பிளாஷ்ப்ரூஃப்புடன் வருவதால், இந்த இயர்ஃபோனை இரு சாதனங்களுடன் இணைத்துக்கொள்ள முடியும். இந்த இயர்ஃபோனுடன் உட்கட்டமைக்கப்பட்ட மைக்கும் அழைப்பு வந்தால் வைப்ரேஷன் அலர்ட் செய்யும் வசதியையும் உள்ளது.

இந்தப்புத்தம் புதிய அறிமுக நிகழ்ச்சியில், Zebronics இன் இயக்குநர், திரு. பிரதீப் தோஷி கூறுகையில், “நாங்கள் தற்போது, தொடர்ச்சியாகபுத்தாக்கத்துடனும்,  AAC கோடெக்கை ஆதரித்து, இசை கேட்கும் அனுபவத்தில் உங்களை மூழ்கச் செய்யும் இந்த மேம்படுத்தப்பட்ட சிப்செட் கொண்ட, புத்தம் புதிய Zeb-Soul வயர்லெஸ் இயர்ஃபோன்தொழில்நுட்பத்திற்கும் எங்கள் தயாரிப்புகளுக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதாகவும் இருப்பதற்கு முயலுகிறோம்.”, என்றார்.

இந்தியா முழுவதிலுமான அனைத்து முன்னணி சில்லறை விற்பனையகங்களிலும் கருப்பு, கிரே, சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த  Zeb-Soul கிடைக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 08-12-2019

  08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-12-2019

  07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RioStarFerrisWheel

  பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • ambedh_day11

  இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

 • SydneyOrangeSky19

  ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்