பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து 285/1
2019-11-13@ 00:10:32

வாங்கரெய்: நியூசிலாந்து லெவன் அணியுடனான 2 நாள் பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து லெவன் அணி 1 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்தது.நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் போராடி வென்றது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதற்கு பயிற்சி பெறும் வகையில் இங்கிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாங்கரெயில் நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் பயிற்சி போட்டியில் (2 நாள் ஆட்டம்), டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து லெவன் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 23 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டொமினிக் சிப்லி 100 ரன், ஜாக் கிராவ்லி 103 ரன் விளாசி ஓய்வு பெற்றனர். கேப்டன் ஜோ ரூட் 41 ரன், ஓல்லி போப் 9 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.2வது பயிற்சி ஆட்டம் (3 நாள்) இதே மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
மேலும் செய்திகள்
ஐஎஸ்எல் கால்பந்து சென்னை அணிக்கு புதிய பயிற்சியாளர்
தெற்காசிய விளையாட்டு கபடியில் இந்தியா வெற்றி
டிசம்பர் 9ம் தேதி முதல் ரஞ்சிக் கோப்பை முதல் போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா மோதல்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் இன்று தொடங்குகிறது
இந்தியா-மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் நாளை முதல் டி20 போட்டி
சாலை விபத்து விழிப்புணர்வுவை வலியுறுத்தி முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர்: பிப்ரவரி 2ல் தொடக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி