SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஈராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலி

2019-11-11@ 15:24:31

ஈராக்: இராக்கில் நடக்கும் தொடர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அவர்கள் மீது இராக் பாதுகாப்புப் படையினர் திறந்த வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை ஷியா மதகுருமார்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.இந்நிலையில் ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஈராக் மனித உரிமை ஆணையம், ஈராக்கில் அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை பஸ்ரா நகரில் நடந்த போராட்டத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு மேலாக ஈராக்கில் நடக்கும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகினர். 15,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். இந்நிலையில் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-01-2020

    27-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-01-2020

    26-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-01-2020

    25-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்