ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் மோடி அரசின் திட்டத்தை கைவிட வேண்டும்: பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
2019-11-10@ 11:14:18

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் வருடத்துக்கு ஒரு முறை பொதுக்குழுவையும் 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது விதியாகும். அந்த அடிப்படையில் திமுக பொதுக்குழு ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி கூடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.
ஆனால், அந்த சமயத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் திமுக பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு நவம்பர் 10-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்தது. அதன்படி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், திமுக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்எல்ஏ.க்கள் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். மறைந்த திமுக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரை:
பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் சட்ட அடிப்படை பண்புகளை சிதைத்திட திமுக ஒப்புக் கொள்ளாது என்றார். இட ஒதுக்கீட்டு கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசு சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும் என்றார். மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டவருக்கு 27% இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர திமுக ஸ்டாலின் சிறப்பு தீர்மானம். அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை திருத்த முயற்சித்தால் அதை திமுக அனுமதிக்காது. இந்தியா முழுவதும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் மோடி அரசின் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகளை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றார்.
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்:
* திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
* இணைய தளத்தின் மூலம் திமுக உறுப்பினர்களை சேர்க்க விதிகளை திருத்தி திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்றுத் தந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுக பொதுக்குழுவில் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றம்.
* 2020-ம் ஆண்டுக்குள் திமுக அமைப்புத் தேர்தலை நடத்தி முடிக்கவும் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றம்
* வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்
* 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைப்பதற்கும்
* உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது.
* இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை என நிர்ணயித்தும்.
* மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம் செய்தும்.
* திருநங்கைகளை கட்சி உறுப்பினர்களாக சேர்க்க திமுக விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.
* வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் சேர்க்க விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம் நிறைவேற்றம்.
* ராஜூவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
* ஊழல் அதிமுக அரசு மீது நடவடிக்கை எடுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.
* பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
* தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
* நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்
* உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்
* அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்
* மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீத தமிழக இளைஞர்களை நியமித்திட வேண்டும்
* அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
ப.சிதம்பரத்தை வரவேற்க திரள வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்
இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை சீட்? இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் முக்கிய முடிவு
கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை முன்மாதிரி கிராமமாக தேர்வு: தயாநிதி மாறன் எம்பி அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை பாஜவில் 15 பேர் தேர்தல் பணிக்குழு: தமிழிசை ஆதரவாளர்கள் புறக்கணிப்பால் சர்ச்சை
பெண்களுக்கு எதிரான குற்றங்களை, விருப்பு வெறுப்பின்றி இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதல்வர் எடப்பாடியின் தம்பி திமுகவில் இணைந்தார்: அதிமுக பற்றி பரபரப்பு பேட்டி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்
06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்
40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!
இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி