SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு

2019-11-10@ 00:02:44

* கண்டுகொள்ளாத தமிழக அரசு * டெல்லி போன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் மவுனம் காத்து வருகிறது. இந்த காற்று மாசு காரணமாக இதயம், நுரையீரல், ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பிறகு காற்று மாசு அதிகரித்துள்ளது.தற்போது, தமிழகத்தில் வடக்கில் இருந்து காற்று வீசுவதால் அங்குள்ள மாசுக்கள் அனைத்தும் வட தமிழகத்தை நோக்கி வந்துள்ளன. இதன்  காரணமாக சென்னை மாநகர் முழுவதும் கடந்த 3ம் தேதி முதல் பனியும், புகையும் சேர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூச்சு திணறலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி சென்னையில் காற்று மாசு டெல்லியை காட்டிலும் மிஞ்சியது. இவ்வாறு காற்று மாசு அதிகரித்து  வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டெல்லியை போன்ற நடவடிக்கை சென்னையில் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, டெல்லியில் வாகனங்கள் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒற்றை இலக்க எண் கொண்ட  வாகனங்களும் ஒரு நாளும், இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் இயக்க கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காற்று மாசு காரணமாக அவசிய காலகட்டங்களை தவிர்த்து, பிற காலகட்டத்தில் வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அந்த  மாநில அரசு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.  ஆனால், தமிழக அரசு சென்னையில் அதிகரித்து  வரும் காற்று மாசு குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், செயலாளர்கள் சென்னையில் காற்று மாசு இல்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.  ஆனால் காற்று மாசுவில் இருந்து மக்களை காக்க அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை தொடர்ந்து  மறுத்து வந்தது. ஆனால், பாதிப்பு அதிகமானதால் வேறு வழியின்றி சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதை ஒத்துக்கொண்டது. இதே ேபான்று  ஒவ்வொரு பாதிப்பு வரும் போது தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால், அதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் 6வது நாளாக நேற்றும் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தனியார் காற்று மாசுபாடு நிகழ் நேர காண்காணிப்பு மையங்களின் ஆய்வில் சுவாசிக்க தகுந்த  அளவான தரக்குறியீடு 100 என்பதை விட அதிகமாக காற்று மாசுபாடு பதிவாகியுள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி காற்று தரக்குறியீடானது மணலியில் 209, கொடுங்கையூரில் 307, அண்ணா நகர் 239, ராமாவரத்தில் 276, ஆலந்தூரில் 156,  வேளச்சேரியில் 156, கோவிலம்பாக்கத்தில் 139 ஆகவும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் டெல்லியில் நேற்று 281 ஆக பதிவாகியிருந்தது.சென்னையில் 6வது நாளாக தொடர்ந்து காற்று அளவு அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டாக்டர்கள் கண்ணன், சந்திரசேகர் ஆகியோர் கூறியதாவது:கடந்த பல ஆண்டுகளாகவே சென்னையில் காற்று மாசுபட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளாமல் இருந்து வருகிறோம் .வட சென்னை போல் தென் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்து வருகிறது.டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களை  போல் இல்லாமல் இப்போதே நாம் இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.

காற்றின் சுழற்சி காரணமாக வட சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் இவற்றிலிருந்து வெளியாகும் மாசு அனைத்து இடங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.இதை கட்டுப்படுத்த அரசு மட்டுமல்லாமல்  பொதுமக்களும் தங்களுடைய வாகனங்களை உரிய சோதனை செய்து காற்று மாசினை குறைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.காற்று மாசு எல்லோரையும் ஒரேமாதிரி பாதிப்பதில்லை. ஒருவருக்கு தாங்குகிற சக்தி இருக்கும். சிறிதளவு மாசு  பெரிய பிரச்னையாக இருக்கும். இந்த மாசு காரணமாக 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் 65 வயதுக்கு மேல் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இதய நோய், நுரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படும். காற்று மாசால் இதயம் பாதிக்கும் போது இருதய பாதிப்பு ஏற்கனவே உள்ளவர்களுக்கு இன்னும் பாதிப்பு அதிகமாகும்.  அதே போன்று நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கும் பாதிப்பு இருக்கும். எதிர்ப்பு சக்திகள் குறைவாக இருந்தால் பாதிப்பு இருக்கும்.இவர்கள் காற்று மாசில் இருந்து பாதுகாத்து கொள்ள எல்லா நடவடிக்கையும் எடுக்க வேண்டும். குறிப்பாக, காற்று சுத்திகரிப்பு கருவி,  முக கவசம் பயன்படுத்த வேண்டும்.காற்று மாசு எல்லோரையும் ஒரேமாதிரி பாதிப்பதில்லை. ஒருவருக்கு தாங்குகிற சக்தி இருக்கும். சிறிதளவு மாசு பெரிய பிரச்னையாக இருக்கும்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pslv_rocket111

    ரிசாட்-2பிஆர்1 உள்ளிட்ட 10 செயற்கைகோள்கள் பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.

  • sweeden_novbal1

    சுவீடனில் இந்திய பாரம்பரிய உடை அணிந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர்கள் !!

  • brazil_venom11

    நஞ்சைக் கக்கும் பாம்பிடமிருந்து உயிரைக் காக்கும் மருந்து தயாரிக்கும் பிரேசில் ஆய்வாளர்கள்

  • canada_seaplanee1

    முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் :கனடாவில் அறிமுகம்

  • chinnaa_trainn11

    சீனாவில் 2 பெட்டிகள் கொண்ட சிறிய ரயில் சேவை தொடக்கம் : வியக்கத்தக்க படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்