SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

'புல் புல்' புயல் எதிரொலி: கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து

2019-11-09@ 17:47:00

கொல்கத்தா: புல் புல் புயல் நாளை அதிகாலையில் அதி தீவிர புயலாக கரையைக் கடக்க உள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான, 'புல் புல்' புயல், நாளை அதிகாலையில், மேற்கு வங்க மாநிலத்துக்கும், வங்கதேச நாட்டுக்கும் இடையே, அதி தீவிர புயலாக கரையை கடக்கும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் காற்று வீசும், மிக பலத்த மழை பெய்யும், மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  இன்று மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரை விமானத்தின் வருகை மற்றும் புறப்பாடு இருக்காது என்று  உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மேற்கு வங்கத்தில், கடலோர பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில், சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்க வேண்டாம். இவ்வாறு, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில், புல் புல் புயலின் தாக்கம் காரணமாக, நேற்று அதிகாலையிலிருந்தே, பலத்த மழை பெய்து வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • varaverppu stage20

    உலகின் மிக பெரிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி : அதிபர் டிரம்ப், மோடி சிறப்புமிக்க உரை ; ஒரு லட்சம் பேர் பங்கேற்பு

  • america athipar2020

    காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப்: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!

  • trumb12020

    இந்திய மண்ணில் முதன் முறையாக கால் பதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!: அகமதாபாத்தில் ஆரத்தழுவி பிரதமர் மோடி வரவேற்பு!!

  • school20

    ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு: மாநில கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

  • jaya20

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்