SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காற்றிலும் விஷம்

2019-11-09@ 02:41:16

சென்னையில் காற்று மாசு டெல்லியை மிஞ்சிவிட்டது. குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் சுவாசிக்க முடியாமல் திணறும் அளவுக்கு காற்றில் மாசு கலந்து விட்டதற்கு நாம் தான் காரணம் என்று வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தலைநகர் டெல்லியில் வைக்கோல் உள்ளிட்ட பயனில்லாத விவசாய பொருட்களை எரித்ததால் உண்டான மாசு அதிகரித்து உ.பி. குஜராத், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களையும் பாதித்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வாகன பெருக்கம், கட்டுமானப்பணிகள், தொழிற்சாலை நச்சு ஆகியன காற்றில் கலப்பதால் ஏற்படும் மாசு சுவாச கோளாறை ஏற்படுத்துகிறது.  இதே போன்று சென்னையில் வாகனங்களை பராமரிக்காமல் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் எரிபொருள் மாசு காற்றில் கலக்கிறது. பெருங்குடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, மணலி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு எரிக்கப்படுவதால் அந்த சுற்றுவட்டாரப்பகுதியில் காற்று கடுமையாக மாசடைகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை, கட்டுமான பணிகளால் ஏற்படும் தூசு ஆகியன காற்றில் கலக்கிறது.

இதை மக்கள் சுவாசிப்பதால் விரைவில் நுரையீரல் பாதிப்பில் இருந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். சென்னையில் பல இடங்களில் அகற்றப்படாத குப்பைகளில் இருந்து வீசும் துர்நாற்றம் காற்றின் நச்சுத்தன்மைக்கு வித்திடுகிறது. நாம் சுவாசிக்க மிக அவசியமானதான காற்றை மாசுபடுத்தாமல் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை முறையாக குப்பை தொட்டியில் சேர்த்தல், இறைச்சி, காய்கறி கழிவுகளை கண்ட இடத்தில் கொட்டாமல் ஒரு பையில் மூடி குப்பை சேகரிப்போரிடம் ஒப்படைத்தல் ஆகியவற்றை மேற்கொண்டால் சுகாதாரமான காற்றை நாம் சுவாசிக்க முடியும். காற்றில் ஈரப்பதம் குறைந்து உலர்ந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் பாதிக்கிறது. அதில் மாசும் கலந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அண்டை வெளியில் நடமாடும் பிரச்னைகள் அனைத்தையும் நமது உடலுக்குள் கொண்டு சேர்த்துவிடும். எனவே தூய காற்றை சுவாசிக்க மரங்களை வளர்ப்போம்.      பாதுகாப்பான குடிநீர் இல்ைல. அதிலும் கலப்படம்; உணவுப்பொருட்களில் கலப்படம்; எல்லாவற்றிலும் ரசாயன கலவை கலந்த விஷம் மனிதனை ஆக்ரமித்து கொண்டு விட்டது. இப்போது காற்றிலும் விஷம் கலந்து பரவும் கொடுமை துவங்கி விட்டது. மனித வாழ்க்கை எங்கே போகிறது  என்ற ஆபத்தான கேள்வி எழத்துவங்கி விட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • PopeFrancisInThailand

  முதல் முறையாக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ்: பாங்காக்கில் நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் உரை

 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்