SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித், பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு: விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

2019-11-09@ 01:25:45

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித், பழங்குடியின மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அம்பேத்கர் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.  தனித்தொகுதியாக சென்னைப் பெருநகர மாநகராட்சியைத் தேர்வு செய்து அறிவிக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் தொகைக்கேற்ப தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய அளவிலான எண்ணிக்கையில் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கிட வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் துணைத் தலைவர் பதவிகளிலும் தலித், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், திருவள்ளுவர் சிலையை அவமதித்த சமூகவிரோதிகளை கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 01-06-2020

    01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 31-05-2020

    31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 30-05-2020

    30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்